Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார் : தண்ணீர் சக்திக்கு முக்கிய கவனம் செலுத்துவதில் பாபா சாகேப் அம்பேத்கர் அளித்த உத்வேகத்தை நினைவு கூர்ந்தார்


தேசிய கடல்சார் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“இந்தியாவின் கடல்சார் துறை தனது வளமான வரலாற்றுடன் நாட்டின் மாற்றத்திற்கு ஆற்றல் அளிக்கக்கூடிய திறனைப் பெற்றது. தேசிய கடல்சார் தினத்தன்று நமது கடல்சார் வலுவை நாட்டின் வளத்துக்காக பயன்படுத்துவதில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

கடல்சார் துறையில் நமது துடிப்பான முயற்சிகளுக்கு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பெரும் உத்வேகமாக இருந்தார். தண்ணீர் சக்தி, நீர்வழிப்பாதைகள், பாசனம், வாய்க்கால் கட்டமைப்பு மற்றும் துறைமுகங்களுக்கு பாபாசாகேப் உயர்ந்த முக்கியத்துவம் அளித்தவர். இந்தத் துறையில் அவரது பணி இந்திய மக்களுக்கு மிகவும் உகந்ததாகவும் பயனளிப்பதாகவும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.”

***