Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய கங்கை கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது

தேசிய கங்கை கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது


காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற தேசிய கங்கைக் கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

தூய்மை கங்கை இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூட்டத்தில் பேசிய பிரதமர் கூறினார். சிறிய நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட தூய்மை முயற்சிகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார்.

இந்தக் கூட்டத்தின்போது, ​​கங்கை நதிப் பகுதிகளில் மூலிகை விவசாயத்தை மேம்படுத்துவதற்கான டவடிக்கைகளை அதிகரிக்க பிரதமர் வலியுறுத்தினார்.

தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் சில திட்டங்கள் மற்றும் பல்வேறு குடிநீர்த் திட்டங்களை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“தேசிய கங்கை கவுன்சில் கூட்டம், தூய்மை கங்கை இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. சிறு நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது உட்பட தூய்மைக்கான முயற்சிகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.”

“இந்தக் கூட்டத்தின்போது, ​​கங்கை நதிக்கரைப் பகுதிகளில் மூலிகை விவசாயம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து வலியுறுத்தினேன். மேலும், பலருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்கக்கூடிய வகையில் ஆற்றுப் பகுதி சுற்றுலா உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தேன்.”

இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

******

MS/PLM/DL