வணக்கம்!
நாட்டு மக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை தின நல்வாழ்த்துகள்! ஒரே இந்தியா, ஒப்பற்ற இந்தியாவுக்காக தமது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்த தேச நாயகர் சர்தார் வல்லபாய் படேலுக்கு இன்று நாடு மரியாதை செலுத்துகிறது.
சர்தார் படேல் அவர்கள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நபர் மட்டுமல்ல, நம் நாட்டு மக்களின் இதயத்தில் இன்னும் வாழ்கிறார். இன்று, நாடு முழுவதும் ஒற்றுமை என்ற செய்தியுடன் முன்னோக்கிச் செல்லும் நமது ஆற்றல் மிக்க நண்பர்கள், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கான தடையற்ற அர்ப்பணிப்பின் அடையாளமாக உள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் தேசிய ஒருமைப்பாட்டு அணிவகுப்பு மற்றும் ஒற்றுமையின் சிலையில் நடைபெறும் நிகழ்வுகளில் இந்த உணர்வை நாம் காணலாம்.
நண்பர்களே,
இந்தியா பூமியின் ஓரு அங்கம் மட்டுமல்ல, லட்சியங்கள், கருத்துகள், நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தாராளமய தரநிலைகள் நிறைந்த நாடு. 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வாழும் நிலப்பரப்பானது நமது ஆன்மா, கனவுகள் மற்றும் லட்சியங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் சமூகம் மற்றும் மரபுகளில் வளர்ந்த ஜனநாயகத்தின் வலுவான அடித்தளம், ‘ஒரே இந்தியா’ என்ற உணர்வை வளப்படுத்தியுள்ளது. ஆனால், நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் முன்னேற முடியும், அப்போதுதான் நாடு தனது இலக்குகளை அடைய முடியும்.
நண்பர்களே,
சர்தார் படேல் எப்போதும் வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய, உணர்திறன்மிக்க, எச்சரிக்கையான, அடக்கம் நிறைந்த மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை விரும்பினார். அவர் எப்போதும் நாட்டின் நலனை முதன்மைப்படுத்தினார். அவரது உத்வேகத்தின் கீழ், இந்தியா அனைத்து வகையான சவால்களை வெளிப்புறத்திலும் உள்நாட்டிலும் சமாளிக்கும் திறன் கொண்டதாக மாறி வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், பல தசாப்தங்கள் பழமையான சட்டங்களை நாடு அகற்றி, தேசிய ஒருமைப்பாட்டைப் போற்றும் லட்சியங்களுக்கு புதிய உயரங்களைக் கொடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு அல்லது தொலைதூர இமயமலையில் உள்ள எந்த கிராமமாக இருந்தாலும், இன்று அனைத்தும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. நாட்டில் நவீன உள்கட்டமைப்பு கட்டுமானம் புவியியல் மற்றும் கலாச்சார இடைவெளிகளை நீக்குகிறது. ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகரும் முன் நாட்டு மக்கள் நூறு முறை யோசிக்க வேண்டும் என்றால், அது எப்படி நடக்கும்? நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் எளிதில் சென்றடையும் போது, மக்களின் இதயங்களுக்கிடையேயான தூரமும் விலகி, நாட்டின் ஒற்றுமை வலுப்பெறும். ‘ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதம்’ என்ற இந்த உணர்வை வலுப்படுத்தும் வகையில், சமூக, பொருளாதார மற்றும் அரசியலமைப்பு ஒருங்கிணைப்பின் மாபெரும் ‘மகா யாகம்’ நாட்டில் நடைபெற்று வருகிறது. நீர்-நிலம்-வானம்-வெளி என ஒவ்வொரு முனையிலும் இந்தியாவின் திறன் மற்றும் உறுதிப்பாடு முன்னோடியில்லாதது. இந்தியா தனது நலன்களைப் பாதுகாப்பதற்காக தற்சார்பு என்ற புதிய பணியைத் தொடங்கியுள்ளது.
மேலும், நண்பர்களே,
இதுபோன்ற சமயங்களில் சர்தார் படேல் அவர்களின் வார்த்தைகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். “பொது முயற்சியின் மூலம், நாட்டை ஒரு புதிய மகத்துவத்திற்கு உயர்த்த முடியும், அதே நேரத்தில் ஒற்றுமையின்மை புதிய பேரழிவுகளுக்கு நம்மை அழைத்து செல்லும்,” என்று அவர் சொன்னார்.
ஒற்றுமையின்மை புதிய நெருக்கடிகளை கொண்டு வரும் போது, அனைவரின் கூட்டு முயற்சியும் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது. சுதந்திர இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொருவரும் மேற்கொண்ட முயற்சிகள் அன்றைய காலத்தை விட இந்த அறம்சார்ந்த சுதந்திர சகாப்தத்தில் மிகவும் பொருத்தமானதாக இருக்கப் போகிறது. சுதந்திரத்தின் இந்த நல்லதொரு சகாப்தம் முன்னெப்போதுமில்லாத வளர்ச்சியையும் மற்றும் கடினமான இலக்குகளை அடைவதும் ஆகும். இது சர்தார் படேல் அவர்களின் கனவுகளின்படி புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதாகும்.
நண்பர்களே,
சர்தார் படேல் நம் நாட்டை ஒரு உடலாக, உயிருள்ள பொருளாகப் பார்த்தார். ‘ஒரே இந்தியா’ பற்றிய அவரது பார்வை, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் மற்றும் ஒரே லட்சியத்தை கனவு காணும் உரிமையும் உள்ளது என்பதாகும். பல தசாப்தங்களுக்கு முன்னர், அந்தக் காலக்கட்டத்தில் அவர்களின் இயக்கங்களின் வலிமையானது, ஒவ்வொரு வகுப்பினர், ஒவ்வொரு பிரிவினர், ஆண்கள் மற்றும் பெண்களின் கூட்டு ஆற்றலின் ஈடுபாடாகும். அப்படியானால், இன்று நாம் ‘ஒரே இந்தியா’ என்று பேசும்போது, அந்த ‘ஒரே இந்தியா’வின் தன்மை என்னவாக இருக்க வேண்டும்? ‘ஒரே இந்தியா’, பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் உள்ள இந்தியாவாக இருக்க வேண்டும்! தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், வனங்களின் வசிப்பவர்கள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சமமாக உணர வேண்டிய இந்தியா! வீடு, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளில் பாகுபாடு இல்லாத, சம உரிமை இருக்க வேண்டிய இந்தியா!
இதைத்தான் இன்று நாடு செய்து கொண்டிருக்கிறது. இந்த திசையில் புதிய இலக்குகளை நிர்ணயிக்கிறது. இன்று நாட்டின் ஒவ்வொரு தீர்மானத்திலும் ஒவ்வொருவரின் முயற்சியும் இணைந்திருப்பதால் இவை அனைத்தும் நடக்கின்றன.
நண்பர்களே,
கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போரில் கூட்டு முயற்சிகளின் பலனை நாம் பார்த்தோம். புதிய கொவிட் மருத்துவமனைகள் முதல் வென்டிலேட்டர்கள் வரை, அத்தியாவசிய மருந்துகளை தயாரிப்பதில் இருந்து 100 கோடி தடுப்பூசி அளவைத் தாண்டியது வரை, ஒவ்வொரு இந்தியர், அரசு மற்றும் தொழில்துறையின் முயற்சியால்தான் இது சாத்தியமானது. தற்சார்பு இந்தியாவை உருவாக்க, இந்த ‘அனைவரின் முயற்சி’ உணர்வை வளர்ச்சியின் வேகத்தின் அடிப்படையாக மாற்ற வேண்டும். சமீபத்தில், பிரதமர் கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான் வடிவில் அரசாங்கத் துறைகளின் கூட்டு அதிகாரம் ஒரே இடத்தில் கொண்டுவரப்பட்டது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்களின் ஒருங்கிணைந்த விளைவு இந்தியாவை கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றியுள்ளது.
சகோதர சகோதரிகளே,
சமூகத்தின் இயக்கவியல் அரசாங்கத்துடன் இணைந்தால், மிகப்பெரிய விஷயங்களை அடைவது கடினம் அல்ல. எனவே, நாம் எதையாவது செய்யும்போதெல்லாம், அது நமது பரந்த தேசிய இலக்குகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் இளைஞனால் கூட எந்தத் துறையிலும் ஒரு புதிய கண்டுபிடிப்புக்கான சவாலை எதிர்கொள்ள முடியும். வெற்றி தோல்வி ஒரு பொருட்டல்ல, ஆனால் முயற்சி மிகவும் முக்கியம். அதேபோல, சந்தையில் ஷாப்பிங் செய்யும்போது, தற்சார்பு இந்தியாவை நாம் ஆதரிக்கிறோமா அல்லது அதற்கு நேர்மாறாகச் செய்கிறோமா என்பதையும் பார்க்க வேண்டும். இந்திய தொழில்துறையும் வெளிநாட்டு மூலப்பொருட்களை சார்ந்திருப்பதற்கான இலக்குகளை நிர்ணயிக்கலாம். நாட்டின் தேவைக்கேற்ப புதிய விவசாயம் மற்றும் புதிய வேளாண் முறைகளை பின்பற்றுவதன் மூலம் தற்சார்பு இந்தியாவுக்கான தங்கள் பங்களிப்பை நமது விவசாயிகள் வலுப்படுத்த முடியும். நமது கூட்டுறவு நிறுவனங்களும் நாட்டின் சிறு விவசாயிகளை பலப்படுத்த வேண்டும். நமது சிறு விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்போம். கிராமங்களின் தொலைதூர இடங்களில் கூட புதிய நம்பிக்கையை உருவாக்க முடியும். மேலும், இது குறித்து உறுதியை எடுத்துக்கொள்ள நாம் முன்வர வேண்டும்.
நண்பர்களே,
இந்த விஷயங்கள் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அவற்றின் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாததாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக, தூய்மை போன்ற சிறிய விஷயங்களில் கூட மக்களின் பங்கேற்பு தேசத்தை வலுப்படுத்தியதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு குடிமகனாக, நாம் ‘ஒரே இந்தியா’ என்று முன்னேறியபோது, நமக்கு வெற்றி கிடைத்தது, இந்தியாவின் மேலாதிக்கத்திற்கும் பங்களித்தோம். ஒரு நல்ல நோக்கம் பின்னணியில் இருந்தால் சிறிய வேலை கூட முக்கியமானது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டுக்கு சேவை செய்வதில் உள்ள மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நமது குடிமைக் கடமைகளை நிறைவேற்றும் அதே வேளையில் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கான நமது ஒவ்வொரு முயற்சியும் சர்தார் படேல் அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். நமது சாதனைகளில் இருந்து உத்வேகம் பெறுவதன் மூலம் நாட்டின் ஒற்றுமை மற்றும் சிறப்பிற்கு புதிய உயரங்களை வழங்க வேண்டும் என்ற விருப்பத்துடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் தேசிய ஒற்றுமை தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராய மொழிபெயர்ப்பு இதுவாகும்.
*
A tribute to the great Sardar Patel. https://t.co/P2eUmvo61n
— Narendra Modi (@narendramodi) October 31, 2021
एक भारत, श्रेष्ठ भारत के लिए जीवन का हर पल जिसने समर्पित किया, ऐसे राष्ट्र नायक सरदार वल्लभ भाई पटेल को आज देश अपनी श्रद्धांजलि दे रहा है।
— PMO India (@PMOIndia) October 31, 2021
सरदार पटेल जी सिर्फ इतिहास में ही नहीं हैं बल्कि हर देशवासी के हृदय में हैं: PM @narendramodi
भारत सिर्फ एक भौगोलिक इकाई नहीं है बल्कि आदर्शों, संकल्पनाओं, सभ्यता-संस्कृति के उदार मानकों से परिपूर्ण राष्ट्र है।
— PMO India (@PMOIndia) October 31, 2021
धरती के जिस भू-भाग पर हम 130 करोड़ से अधिक भारतीय रहते हैं, वो हमारी आत्मा का, हमारे सपनों का, हमारी आकांक्षाओं का अखंड हिस्सा है: PM @narendramodi
सरदार पटेल हमेशा चाहते थे कि, भारत सशक्त हो, समावेशी भी हो, संवेदनशील हो और सतर्क भी हो, विनम्र हो, विकसित भी हो।
— PMO India (@PMOIndia) October 31, 2021
उन्होंने देशहित को हमेशा सर्वोपरि रखा।
आज उनकी प्रेरणा से भारत, बाहरी और आंतरिक, हर प्रकार की चुनौतियों से निपटने में पूरी तरह से सक्षम हो रहा है: PM @narendramodi
आज़ाद भारत के निर्माण में सबका प्रयास जितना तब प्रासंगिक था, उससे कहीं अधिक आज़ादी के इस अमृतकाल में होने वाला है।
— PMO India (@PMOIndia) October 31, 2021
आज़ादी का ये अमृतकाल, विकास की अभूतपूर्व गति का है, कठिन लक्ष्यों को हासिल करने का है।
ये अमृतकाल सरदार साहब के सपनों के भारत के नवनिर्माण का है: PM @narendramodi
सरदार साहब हमारे देश को एक शरीर के रूप में देखते थे, एक जीवंत इकाई के रूप में देखते थे।
— PMO India (@PMOIndia) October 31, 2021
इसलिए, उनके 'एक भारत' का मतलब ये भी था, कि जिसमें हर किसी के लिए एक समान अवसर हों, एक समान सपने देखने का अधिकार हो: PM @narendramodi
आज से कई दशक पहले, उस दौर में भी, उनके आंदोलनों की ताकत ये होती थी कि उनमें महिला-पुरुष, हर वर्ग, हर पंथ की सामूहिक ऊर्जा लगती थी।
— PMO India (@PMOIndia) October 31, 2021
आज जब हम एक भारत की बात करते हैं तो उस एक भारत का स्वरूप क्या होना चाहिए? - एक ऐसा भारत जिसकी महिलाओं के पास एक से अवसर हों: PM
सरकार के साथ-साथ समाज की गतिशक्ति भी जुड़ जाए तो, बड़े से बड़े संकल्पों की सिद्धि कठिन नहीं है।
— PMO India (@PMOIndia) October 31, 2021
और इसलिए, आज ज़रूरी है कि जब भी हम कोई काम करें तो ये ज़रूर सोचें कि उसका हमारे व्यापक राष्ट्रीय लक्ष्यों पर क्या असर पड़ेगा: PM @narendramodi
Today, India pays homage to Sardar Patel, whose life was devoted to furthering national progress, unity and integration. pic.twitter.com/CYOjBisBgN
— Narendra Modi (@narendramodi) October 31, 2021
भारत सशक्त हो, समावेशी भी हो,
— Narendra Modi (@narendramodi) October 31, 2021
संवेदनशील हो और सतर्क भी हो,
विनम्र हो, विकसित भी हो।
सरदार पटेल ने देशहित को हमेशा सर्वोपरि रखा।
आज उनकी प्रेरणा से भारत हर प्रकार की चुनौतियों से निपटने में पूरी तरह से सक्षम हो रहा है। pic.twitter.com/pqWeKOjsot
Collective efforts have a great impact of national development.
— Narendra Modi (@narendramodi) October 31, 2021
Whenever we undertake any such effort, let us think about how it can strengthen the efforts for national transformation. pic.twitter.com/WNCXCv519G