மஅ சர்தார் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி படேலுக்கு அஞ்சலி செலுத்தினார். புது தில்லி ராஜ்பத்தில் கூடியிருந்த இளைஞர் மற்றும் மாணவர் பட்டாளத்திடம் உரையாடிய பிரதமர் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அடித்தளத்தை உருவாக்கியவர் சர்தார் படேல் என்று கூறினார். சர்தார் படேலின் அறிவுபூர்வமான முடிவுகளினாலும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளாலும் தான் நவீன சுதந்திர இந்தியா உருவானது.
சர்தார் படேல் நமக்கு ஒன்றுபட்ட பாரதத்தை அளித்தார், அதனை வளமையான பாரதமாக மாற்றுவது நம்மிடம்தான் உள்ளது என்று பிரதமர் கூறினார். ஒற்றுமை, அமைதி, இணக்கம் ஆகியவை அடிக்கோள்கள். இவற்றை கொண்டுதான் 125 கோடி மக்கள் முன்னேற முடியும்.
1920-ல் அகமதாபாத்தின் மாநகராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது சர்தார் படேல் எடுத்த முக்கிய முயற்சிகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார். அதில் தூய்மை இயக்கமும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடும் அடங்கும்.
“ஒன்றுபட்ட பாரதம், வளமையான பாரதம்” என்ற புதிய திட்டம் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ் இரு மாநிலங்கள் ஒரு வருட காலத்திற்கு ஒரு தனிப்பட்ட கூட்டுறவை மேற்கொள்ளும். அந்த வருடத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே கலாச்சாரம் மற்றும் மாணவர் பரிமாற்றம் செய்யப்படும். இது இரு மாநில மக்களுக்கு இடையே ஒரு புரிதலை ஏற்படுத்தும். இதன் மூலம் ஒரு மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநிலத்தோடு கூட்டுறவு வைத்துக்கொள்ள முடியும்.
இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
“ஒற்றுமைக்கான ஓட்டம்” நிகழ்ச்சியை பிரதமர் மோடி கோடி அசைத்து துவக்கிவைத்தார். புது தில்லியின் துணை நிலை ஆளுநர் திரு. நஜீப் ஜங், புது தில்லி முதல் அமைச்சர் திரு. அர்விந்த் கேஜ்ரிவால், மத்திய அமைச்சர்கள் திரு. ராஜ்நாத் சிங் மற்றும் திரு. வெங்கையா நாய்டு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
I bow to Sardar Patel. May his blessings always be with the nation & inspire us to scale newer heights: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 31, 2015
Paying homage to Sardar Patel. pic.twitter.com/lRlswkIcuB
— Narendra Modi (@narendramodi) October 31, 2015