தெஹரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. இம்ரான் கான் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். அவர் பிரதமர் திரு. மோடியை பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.
மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் இருதரப்பு உறவில் ஏற்பட்டு வரும் முனேற்றங்களை வரவேற்றனர். மேலும், இந்த முன்னேற்றங்கள் இருநாடுகளுக்கு இடையேயான உறவினை மேலும் வலுவடைய செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.