Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் பேச்சு


கனமழை காரணமாக தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து, தெலங்கானா முதல்வர் திரு.சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திர பிரதேச முதல்வர் திரு.ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரிடம் பிரதமர் திரு.நரேந்திர மோடி பேசினார். 

இது குறித்து அவர் டிவிட்டரில் விடுத்துள்ள பதிவில், ‘‘ தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் கனமழை நிலவரம் குறித்து @TelanganaCMO KCR  மற்றும்  AP CM @ysjagan ஆகியோருடன் பேசினேன். மீட்பு மற்றும் நிவாரண பணியில் மத்திய அரசு முடிந்தளவு உதவி அளிக்கும் என உறுதியளித்தேன். கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியே என் எண்ணங்கள் உள்ளன’’ என குறிப்பிட்டுள்ளார்.

**********************