தெற்காசிய வனவிலங்கு அமலாக்க கட்டமைப்பின் உத்தரவை ஏற்றுச் செயல்படுவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துடன், இதில் முறையான உறுப்பினராக இந்தியா இருந்து அதன் மூலம் உறுப்பு நாடுகளுடன் இணைந்து எல்லை தாண்டிய வனக் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைந்த செயல்பாடு, திறன் உருவாக்கம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் இதனை பலப்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய எட்டு நாடுகள் இந்த பிராந்திய அமைப்பில் இடம்பெற்றுள்ளன. இது வனவிலங்குகள் தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராடவும், பொது இலக்குகளை எட்டவும், சட்டவிரோதமான வர்த்தகத்தை எதிர்கொள்ளவும், அரசுகள் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த உத்தரவை கடைப்பிடிக்க ஒப்புக் கொண்டிருப்பது வனவிலங்கு தொடர்பான குற்றங்களை இந்தப் பிராந்தியம் மற்றும் அதற்கப்பாற்பட்ட பகுதிகளில் அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு வழி வகை செய்கிறது. இந்த இலக்குகளை எட்டுவதற்காக கீழ்காணும் நோக்கங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வனவிலங்குகள் மற்றும் வன உயிர்களை பாதுகாக்க உறுப்புநாடுகளில் சட்டம் மற்றும் கொள்கைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்வது.
வனவிலங்குகளை வேட்டையாடுவது மற்றும் சட்டவிரோமான வர்த்தகம் தொடர்பான அச்சுறுத்தல்களை இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் ஆவணப்படுத்த முடிவு.
வனவிலங்கு தொடர்பான குற்றங்களை எதிர்க்க எடுக்கப்படும் நிறுவனம் சார்ந்த பொறுப்புணர்வை பலப்படுத்தி, ஆராய்ச்சிகளை மேம்படுத்தவும், தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப ஆதரவை அதிகரிக்கவும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டதுடன், உறுப்புநாடுகள் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டு தேசிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஊக்குவிக்கப்படும்.
சட்டவிரோமான கடத்தல் மற்றும் வனவிலங்கு தொடர்பான குற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையில் அரிய உயிரினங்கள் வாழும் இந்தப் பகுதியில் அதிகம் நிகழ்கின்றன. இந்தப் பிராந்தியத்தில் வன உயிர்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமாகும்.