Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக மேதகு சிரில் ரமஃபோசா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்


தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக மேதகு சிரில் ரமஃபோசா இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான உத்திபூர்வக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த அதிபர் ரமஃபோசாவுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“தென்னாப்பிரிக்கக் குடியரசின் அதிபராக நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு @CyrilRamaphosa  மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான உத்திபூர்வக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்.”

***

AD/SMB/DL