பிரதமர் திரு. நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பெங்களூரு வந்தடைந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர், பின்னர் கிரீஸ் சென்றார். பிரதமர் பல்வேறு இருதரப்பு சந்திப்புகள் மற்றும் உள்ளூர் சிந்தனைத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தினார். இரு நாடுகளிலும் உள்ள துடிப்பான இந்திய சமூகங்களையும் அவர் சந்தித்தார். காணொலி மூலம் சந்திரயான்-3-ன் லேண்டர், நிலவில் தரையிறங்குவதை நேரில் கண்டு களித்த பிரதமர், பின்னர் இஸ்ரோ குழுவினருடன் கலந்துரையாட நேராக பெங்களூரு வந்தடைந்தார்.
எச்ஏஎல் விமான நிலையத்திற்கு வெளியே அவருக்கு பிரமாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி, ஜெய் ஜவான், ஜெய் கிசான் மற்றும் ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன் ஆகிய முழக்கத்துடன் கூடியிருந்த குடிமக்களிடம் தனது உரையைத் தொடங்கினார். இந்தியாவின் மகத்தான வெற்றி குறித்து தென்னாப்பிரிக்கா மற்றும் கிரேக்கத்தில் அதே உற்சாகத்தை தாம் கண்டதாக திரு. மோடி கூறினார்.
இஸ்ரோ குழுவுடன் இருக்க தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரதமர், நாடு திரும்பியதும் முதலில் பெங்களூருக்கு வர முடிவு செய்ததாகக் கூறினார். தாம் வரும்போது வழக்கமான மரபு நடைமுறைகள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என்ற தமது வேண்டுகோளை ஏற்று, ஒத்துழைப்பு அளித்த ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார் .
பிரமாண்ட வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், கூடியிருந்த குடிமக்களின் உற்சாகத்தைக் குறிப்பிட்டு, சந்திரயான் குழுவில் இடம்பெற இஸ்ரோவுக்குச் சென்றார்.
—-
ANU/AP/PLM/DL
I am very grateful to the people of Bengaluru for the very warm welcome this morning. pic.twitter.com/oV0NcUy9lR
— Narendra Modi (@narendramodi) August 26, 2023