Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மையை ஊக்குவிக்க சித்தாபூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் வர்மா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு


தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சித்தாபூர் (உத்தரப்பிரதேசம்) நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் வர்மா மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சித்தாபூர் நாடாளுமன்ற உறுப்பினரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியுள்ளதாவது:

“இந்த முயற்சி, தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். இதனுடன் தூய்மை சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.”

***

 (Release ID: 1901217)

SRI/RB/RR