Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மையே சேவை இயக்கத்தில் பிரதமர் பங்கேற்பு தில்லி பள்ளியில் தொண்டு புரிந்தார்

தூய்மையே சேவை இயக்கத்தில் பிரதமர் பங்கேற்பு
தில்லி பள்ளியில் தொண்டு புரிந்தார்

தூய்மையே சேவை இயக்கத்தில் பிரதமர் பங்கேற்பு
தில்லி பள்ளியில் தொண்டு புரிந்தார்

தூய்மையே சேவை இயக்கத்தில் பிரதமர் பங்கேற்பு
தில்லி பள்ளியில் தொண்டு புரிந்தார்


 

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கப்பட்ட தூய்மையே சேவை இயக்கத்தில் (Swachhata Hi Seva) பங்கேற்றார். அப்போது, நாட்டின் 17 இடங்களில் இருந்த மக்களுடன் காணொலியின் வழியாக கலந்துரையாடினார். இந்தத் தூய்மை இயக்கத்தையொட்டி, பிரதமர் தில்லியில் உள்ள பள்ளியில் நேரடியாக உடலுழைப்பை நல்கி தொண்டு (Shramdaan) புரிந்தார்.

தில்லியில் இருந்தபடி காணொலி மூலம் நாடு முழுவதும் தூய்மையே சேவை இயக்கத்தை அவர் தொடங்கிவைத்த சிறிது நேரத்தில், மத்திய தில்லி ராணி ஜான்சி சாலையில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளிக்கு விரைந்தார். அங்கு, அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அங்கு நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் நேரடியாகவே அவர் ஈடுபட்டார். அத்துடன், அங்கு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களை தூய்மைப் பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.

அந்தப் பள்ளிக்குப் பிரதமர் பயணம் செய்தபோது வழக்கமான போக்குவரத்திலேயே அவர் வாகனத்தில் சென்றார். பிரதமருக்கான வழக்கமான போக்குவரத்து நடைமுறை இல்லை. போக்குவரத்தில் சிறப்பு ஏற்பாடு ஏதும் செய்யப்படவில்லை.

பிரதமர் இன்று சென்ற அம்பேத்கர் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தை 1946ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் வாங்கினார். தாழ்த்தப்பட்டோரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒரு பள்ளியை  தொடங்குவதற்காக அம்பேத்கர் அந்த இடத்தை வாங்கியிருந்தார்.

 

 

*****