Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மைப் பணிக்கு மிகச்சிறந்த உதாரணமாக, மகாபலிபுரம் கடற்கரைப் பகுதியில் பிரதமர் குப்பைகளை அகற்றினார்


 

தூய்மை இந்தியாவை உருவாக்க அரும்பாடுபட்டு வரும் பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரவர் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க ஒவ்வொரு தனிநபரும் பாடுபட வேண்டும் என்பதற்கு இன்று (12.10.2019) மீண்டும் ஒரு உதாரணம் படைத்துள்ளார். 

மகாபலிபுரம் கடற்கரையில் இன்று காலை சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, கடற்கரையில் பரவிக் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தினார்.

பின்னர் இதுகுறித்து தமது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்ட அவர், “மகாபலிபுரம் அருகே உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று காலை நடைப்பயிற்சியின் இடையே குப்பைகளை அகற்றினேன்.  இந்தப் பணியை சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக மேற்கொண்டேன்.   நான் சேகரித்த குப்பைகளை, ஹோட்டல் ஊழியர்களில் ஒருவரான ஜெயராஜ் என்பவரிடம் வழங்கினேன்.  நம்மைச் சுற்றியுள்ள பொது இடங்கள் தூய்மையாகவும், நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம்! நாம் அனைவரும் உடல் உறுதியுடனும், ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்வோம்.”

 

“மகாபலிபுரம் அருகே உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று காலை நடைப்பயிற்சியின் இடையே குப்பைகளை அகற்றினேன்.  இந்தப் பணியை சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக மேற்கொண்டேன்.  

நான் சேகரித்த குப்பைகளை, ஹோட்டல் ஊழியர்களில் ஒருவரான ஜெயராஜ் என்பவரிடம் வழங்கினேன். 

நம்மைச் சுற்றியுள்ள பொது இடங்கள் தூய்மையாகவும், நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம்!

நாம் அனைவரும் உடல் உறுதியுடனும், ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்வோம்.” . pic.twitter.com/qBHLTxtM9y

— Narendra Modi (@narendramodi)