Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தும்கூர் மாவட்டத்தில் எச்.ஏ.எல்.லின் புதிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்.

கர்நாடக மாவட்டம் தும்கூர் மாவட்டத்தில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தும்கூரில் வர உள்ள ஹெலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலை, ஒரு சாதாரண தொழிற்சாலை அல்ல என்றும், உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு தொழிற்சாலை என்றும் கூறினார்.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் புகழ்பெற்ற வாசகமான “ஜெய் ஜவான், ஜெய் கிஸான்” என்ற முழக்கத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். கடந்த ஐம்பதாண்டுகளில், விவசாயத் துறையில் ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு, இந்தியா தற்போது சுயசார்படைந்துள்ளதாக தெரிவித்தார். உலகின் எந்த படைகளுக்கும் சளைக்காத படைகளான இந்திய ஆயுதப் படைகளுக்கு, உலகின் சிறந்த ஆயுதங்களை வழங்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்றார் பிரதமர். இதற்காக, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படக் கூடிய பழைய தொழில்நுட்பத்தையும் உபகரணங்களையும் இனி நம்பி இருக்கக் கூடாது என்றார் பிரதமர்.

மத்திய அரசு, பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்வதில் அழுத்தம் தருவது என்று முடிவெடுத்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்தார். தும்கூரில் உருவாக உள்ள ஹெலிகாப்டர்கள், தொலைதூரத்தில் பணியாற்றும் ஆயுதப் படை வீரர்களுக்கு பயன்படும் என்றார். இந்த தொழிற்சாலையில் இருந்து 2018ல் முதல் ஹெலிகாப்டர் பறக்கும் என்றார் பிரதமர். இந்த தொழிற்சாலையினால், 4000 குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் என்றார் பிரதமர். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் கனவான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களும் பயன்பெறும் வகையில், தொழில்மயமாக்கல் வேண்டும் என்பதை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த தொழிற்சாலை அவரது கனவை நிறைவேற்றும் என்றார்.

கர்நாடக மாநில ஆளுநர் திரு வாஜுபாய் வாலா, கர்நாடக முதல்வர் திரு சித்தாராமையா, மத்திய அமைச்சர்கள் திரு மனோகர் பாரிக்கர், திரு டி.வி சதானந்த கவுடா, திரு அனந்த குமார், மத்திய துணை அமைச்சர் திரு ஜி.எம். சித்தேஸ்வரா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.