Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

துபாய் பட்டத்து இளவரசரை பிரதமர் வரவேற்றார்

துபாய் பட்டத்து இளவரசரை பிரதமர் வரவேற்றார்


துபாய் பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சருமான திரு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வரவேற்றார்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொண்ட போது துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதை நினைவு கூர்ந்த பிரதமர், ஐக்கிய அரபு அமீரக அதிபர் திரு முகமது பின் சயீத் அல் நஹ்யான், துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமரும், துணை அதிபருமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தனது பயணம் இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளில் தலைமுறை தொடர்ச்சியை குறிப்பதாக இருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், பரஸ்பர நம்பிக்கை மற்றும் எதிர்காலத்திற்கான பகிரப்பட்ட தொலைநோக்கு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நீடித்த கூட்டாண்மையை எடுத்துரைத்தார்.

வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் இந்தியாஐக்கிய அரபு அமீரகத்தின் விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சுமார் 4.3 மில்லியன் இந்தியர்களின் நலனை உறுதி செய்ததற்காக ஐக்கிய அரபு அமீரகத் தலைமைக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையேயான துடிப்பான உறவுகளில் அவர்களின் முக்கிய பங்களிப்பை அங்கீகரித்தார்.

***

(Release ID: 2120067)

SV/IR/RJ/KR/DL