Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தி குவெஸ்ட் பார் எ வேர்ல்ட் வித்அவுட் ஹங்கர் என்ற எம்.எஸ் சுவாமிநாதன் பற்றிய 2 தொடர் தொகுப்பு புத்தகங்களை பிரதமர் வெளியிட்டார்

தி குவெஸ்ட் பார் எ வேர்ல்ட் வித்அவுட் ஹங்கர் என்ற எம்.எஸ் சுவாமிநாதன் பற்றிய 2 தொடர் தொகுப்பு புத்தகங்களை பிரதமர் வெளியிட்டார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி டாக்டர். எம்.எஸ் சுவாமிநாதன் தொடர்புடைய இரண்டு பாகம் கொண்ட நூலை வெளியிட்டார். எம்.எஸ் சுவாமிநாதன்: தி குவெஸ்ட் பார் எ வேர்ல்ட் வித்அவுட் ஹங்கர் என்ற தலைப்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குஜராத் முதல் அமைச்சராக தான் இருந்த போது, முனைவர். சுவாமிநாதனுடன் ஆலோசித்த பின்பு மண் வள அட்டை திட்டம் கொண்ட வரப்பட்டதை பிரதமர் நினைவு கூறினார்.

முனைவர். எம்.எஸ். சுவாமிநாதனின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டை பாராட்டிய பிரதமர், அவர் வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல விவசாயிகளின் விஞ்ஞானியும் ஆவார். நடைமுறை சாத்தியங்களுக்கு ஏற்ற வகையில் முனைவர். சுவாமிநாதனின் ஆராய்ச்சிகள் இருப்பதே அவரின் சிறப்பு தன்மை ஆகும் என்ற பிரதமர் முனைவர். எம்.எஸ். சுவாமிநாதனின் எளிமையையும் பாராட்டினர்.

வேளாண் துறையில் உள்ள சவால்கள் குறித்து பேசிய பிரதமர், வேளாண் துறையின் வெற்றி கிழக்கு இந்தியாவையும் சென்ற அடைய வேண்டும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இது சாத்தியம் ஆகும் என்று கூறினார்.

நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் பாரம்பரிய வேளாண் அறிவாற்றலுடன் சிறந்த முடிவுகளை தரும் என்று பிரதமர் கூறினார். சில மாநிலங்களை எடுத்துக்காட்டாக பயன்படுத்திய அவர், ஒவ்வொரு மாவட்டமும் தனக்கென்று சிறப்பு வேளாண் அடையாளத்தை கொண்டுள்ளது என்றார். இது வர்த்தக முறையை மேம்படுத்தி, தொழில் தொகுப்பில் வேளாண் தொகுப்புகளை அதிகரிக்கும் என்றார்.

2022 ஆண்டுக்கு முன் விவசாய நிலங்களின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு குறித்து பேசிய பிரதமர், இதற்கு பல்வேறு முக்கிய துறைகளில் இலக்குடன் கூடிய அணுகுமுறை வேண்டும் என்றார். முந்தைய வேளாண் காப்பிட்டு திட்டங்களை விட, தற்போதுள்ள பிரதமர் பயிர் காப்பிட்டு திட்டத்தை விவசாயிகள் வெகுவாக ஏற்றுகொண்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார். இது விவசாயிகளின் துணிச்சலுடன் இடர்களை மேற்கொள்ளும் திறனை அதிகரித்து, ஆராய்ச்சி முடிவுகளை ஆய்வகங்களில் இருந்து வயல்வெளிகளுக்கு கொண்டு செல்லும் முறையை ஊக்கப்படுத்தும் என்றார்.

பிரதமரின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்த டாக்டர். எம்.எஸ் சுவாமிநாதன், பிரதமரின் தொலைதூர லட்சியக் கனவை பாராட்டினார். தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கை இடையேயான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.