Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திவ்ய குமார் பாடிய “ஹர் கர் மந்திர் ஹர் கர் உத்சவ்” பக்திப் பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்


சித்தார்த் அமித் பாவ்சர் இசையில் திவ்ய குமார் பாடிய “ஹர் கர் மந்திர் ஹர் கர் உத்சவ்” என்ற பக்திப் பஜனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு, அயோத்தி தாமில் மங்களகரமான நேரத்தின் தருணம் நெருங்கிவிட்டது என்று திரு. மோடி கூறியுள்ளார். இந்த நன்னாளில், ராமரின் புகழ் வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட பக்திப் பாடலைப் பகிர்ந்து கொண்ட அவர், இந்த விளக்கக் காட்சியின் மூலம் நீங்கள் நம்பிக்கை மற்றும் பக்தியின் சூழலை அனுபவிப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு, அயோத்தி தாமில் மங்களகரமான தருணம் நெருங்கிவிட்டது. இந்த நன்னாளில், ஸ்ரீ ராமரின் கோஷங்கள் வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கின்றன. இந்த விளக்கக்காட்சியிலிருந்து இந்த நம்பிக்கை மற்றும் பக்தியின் சூழலை நீங்கள் அனுபவிப்பீர்கள். #ShriRamBhajan”

—-

ANU/PKV/BS/DL