Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்

தில்லி பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்

தில்லி பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்

தில்லி பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்

தில்லி பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்

தில்லி பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்

தில்லி பொருளாதார மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்


அரசில் என்னுடன் பணியாற்றுபவர்களே,

நண்பர்களே மற்றும் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்துள்ள மேன்மை மிகு விருந்தினர்களே,

6வது பொருளாதார மாநாட்டில் உரையாற்றுவதில் இன்று இங்கு இருப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்த மாநாடு உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பினர்கள், முன்னணி சிந்தனையாளர்களை ஒரு மேடையில் சேர்த்துள்ளது. இதற்கு ஏற்பாடு செய்துள்ள மத்திய நிதியமைச்சகத்திற்கு என் பாராட்டுதல்கள்.

இங்கே உங்கள் விவாதத் தலைப்பு ஜே.எ.எம். அதாவது ஜன் தன் திட்டம், ஆதார் மற்றும் கைபேசி. இந்த ஜே.எ.எம். நெடுநோக்கு வரவிருக்கும் பல முன்னோக்குத் திட்டங்களின் வலிமையான அடிப்படையாகும். என்னைப் பொறுத்தவரை ஜே.எ.எம். என்பது Just Achieving Maximum அதாவது உடனடியாக அதிகபட்சத்ததை அடைவது.

• செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அதிகபட்ச விலைமதிப்பை பெறுதல்.

• ஏழை மக்களுக்கு அதிகபட்ச அதிகாரமளித்தல்.

• பொதுமக்களிடையே அதிகபட்ச தொழில்நுட்பம் சென்றடைவதை உறுதி செய்வது.

முதலில் இந்தியப் பொருளாதாரத்தினைப் பற்றி சுருக்கமாகக் காண்போம். ஏறத்தாழ அனைத்து பொருளாதார குறியீடுகள் அடிப்படையிலும் இந்தியப் பொருளாதாரம் 17 மாதங்களுக்கு முன்பு நாங்கள் பதவி ஏற்றபோது இருந்ததைவிட மிகச் சிறப்பாகவே உள்ளது.

• மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. உயர்ந்துள்ளது; பணவீக்கம் குறைந்துள்ளது.

• அந்நிய முதலீடுகள் உயர்ந்துள்ளன. நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது.

• வருவாய் அதிகரித்துள்ளது. வட்டி வீதங்கள் குறைந்துள்ளன.

• நிதிப்பற்றாக்குறை குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பு நிலையாக உள்ளது.

இது தற்செயலாக நடந்தது அல்ல என்பது வெளிப்படை. மேலும் உலகப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுகிறது எனச் சொல்ல முடியுது. இந்த வெற்றி நன்கு சிந்தித்து உருவாக்கிய பல கொள்கைகள் இங்குள்ள அனைவருக்கும் தெரிந்ததே. நாம் நிதி சார்ந்த நலன் ஒன்று சேர்த்தல் பாதையில் சென்று கொண்டுள்ளோம். முதல் முறையாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பண அடிப்படை ஒப்பந்தம் ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கியுடன் செய்து கொண்டுள்ளோம். நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளபோதும் உற்பத்தி அடிப்படையிலான முதலீடுகளை குறிப்பிட்ட அளவு உயர்த்தியுள்ளோம். இது இரு வழிகளில் சாத்தியமாகியுள்ளது. முதலாவது புவியில் புதைந்துள்ள எரிபொருள் மீது கார்பன் வரிவிதித்துள்ளோம். டீசல் விலை கட்டுப்பாட்டு முறையை அகற்றும் தைரியமான நடவடிக்கையை எடுத்துள்ளோம். இதனால் எரிசக்தி தொடர்பாக மான்யங்கள் அகற்றப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக வரிகளை விதித்துள்ளோம். நிலக்கரி மீதான செஸ்வரி டன்னுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உலக அளவில் கார்பன் வரிகள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆனால் அது வெறும் பேச்சுடன் நின்று விடுகிறது. நாம் உண்மையில் அதனை செயல்படுத்தி உள்ளோம். இரண்டாவதாக ஊதாரித்தனமான செலவுகளை, தொழில்நுட்ப பயன்பாடு போன்ற புதுமையான வழிகளில் குறைத்துள்ளோம். இவ்வழிகளில் சில உங்களது அலுவல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. உதாரணமாக மானியங்கள் உரியவருக்குச் சென்று சேர ஆதாரைப் பயன்படுத்துவது. இதுபோன்ற சீர்த்திருத்தங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் நமது சீர்த்திருத்தங்கள் பொதுவாக உணரப்பட்டதைவிட விரிவானவை, ஆழமானவை.

இது குறித்து விரிவாகப் பேச முன் இரு பிரச்சினைகளை எழுப்ப விழைகிறேன். முதலாவது சீர்த்திருத்தம் எதற்காக? சீர்த்திருத்தங்களின் நோக்கம் என்ன? உள்நாட்டு மொத்த உற்பத்தி வீதத்தை உயர்த்துவதாகும் மட்டும்தானா? அல்லது சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதாற்கா? எனது பதில் தெளிவானது. நாம் சீர்த்திருத்தம் மேற்கொள்வது மாற்றங்களுக்காகவே.

இரண்டாவது கேள்வி. சீர்த்திருத்தங்கள் யாருக்காக? இதற்கு இலக்கானவர்கள் யார்? நிபுணர் குழுக்களிடையே நல்ல பெயர் எடுத்து அறிவுசார் விவாதங்களில் வெற்றிபெறுவது நமது நோக்கமா? அல்லது சர்வதேச அமைப்புகளின் தரவரிசைப் பட்டியலில் நல்ல நிலை பெறுவதா? இதிலும் எனது பதில் தெளிவானதே. சீர்த்திருத்தம் என்று அனைத்து குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு உதவக்கூடிய ஒன்று. அரசுகள் மேலும் சிறந்த வாழ்க்கை அடைய வழி வகுப்பது. இது அனைவருக்கும் … அனைவருக்கும்…

சுருங்கச் சொன்னால் சீர்த்திருத்தம் சீர்த்திருத்தத்திக்காக அல்ல. என்னைப் பொறுத்தவரை இலக்கு நோக்கிய நமது நீண்ட பயணத்தில் சீர்த்திருத்தம் இடைப்பட்ட ரயில் நிலையம் போன்றது. இலக்கு இந்நியாவில் மாறறங்கள் ஏற்படுத்துவதேயாகும். எனவே சீர்த்திருத்தம் மாற்றங்களுக்காகவே. மாற்றங்களுக்கான சீர்த்திருத்தம் நெடிய மாரத்தான் ஓட்டம். 100 மீட்டர், 200 மீட்டர் என்ற குறுகிய ஸ்பிரின்ட் ஓட்டம் அல்ல.

நாம் மேற்கொண்டுள்ள சீர்த்திருத்தங்கள் பலவகைப்பட்டவை. அவற்றை எளிமைப்படுத்த நிதிசார்ந்தவை, அமைப்புகள் சார்ந்தவை, நிறுவனம் சாந்தவை என மூன்றும் பாகுபடுத்தியுள்ளேன். சீர்த்திருத்தம் அனைத்தும் பற்றிக் கூறுவது இங்கு சாத்தியமல்ல. எனினும் மிக முக்கியம் வாய்ந்தவை பற்றி கட்டாயம் குறிப்பிடுவேன்.

நிதி சீர்த்திருத்தங்கள் பற்றி முதலில் எடுத்துக் கொள்வோம். வட்டி வீதம், கடன் கொள்கை பற்றி அடிக்கடி பேசுகிறோம். வட்டி வீத மாற்றங்கள் மாதக் கணக்கில் விதிக்கப்படுகின்றன. பல டன் காகிதமும், பல மணி நேர தொலைக்காட்சி விவாதங்களும் இது குறித்து செலவிடப்படுகின்றன. வட்டிவீதம் முக்கியமானதுதான். ஆனால் வங்கிகள் முறையில் சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு அது முக்கியமா? வங்கிக்கு பணம் வழங்கவோ அதிலிருந்து பணம் கடன் பெறவோ வாய்ப்பு இல்லாதவருக்கு அது முக்கியமா? நாட்டின் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இத்தகையவர்கள் தான் எனில் வட்டி வீதம் எத்தகைய முக்கியத்துவம் பெறும்? இக்காரணத்திற்காகவே வளர்ச்சித்துறை நிபுணர்கள் நிதி அமைப்புகளில் அனைவரும் இணைக்கப்பட வேண்டும் என்கின்றனர். கடந்த 17 மாதங்களில் நாம் செய்தது என்னவெனில் 19 கோடி பேரை வங்கி அமைப்புகளுக்குள் கொண்டு வந்துள்ளோம். இந்த எண்ணிக்கை உலகின் பல்வேறு நாடுகளின் மொத்த மக்கள்தொகைக்கும் கூடுதலாகும். இப்போது இத்தனை கோடி பேர் நமது வங்கி அமைப்புகளுக்குள் உள்ளனர். இப்போது ‘வட்டி வீதம்’ போன்ற வார்த்தைகள் அவர்களுக்கு அர்த்தமுள்ளதாகிறது. இவர்கள் அமைப்பு முறைக்குள் வந்தவுடன் பிரமிட் அமைப்பின் அடித்தளத்தில் பலம் உள்ளது என்பது நிர்ப்பந்தப்பட்டுள்ளது. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ ஜன்தன் திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் தற்போது ரூ.26,000 கோடி அதாவது குறக்குறைய 400 கோடி டாலர் நிலுவையில் உள்ளது. நமது நிதிமுறையில் அனைவரையும் இணைக்கும் நமது சீர்த்திருத்தம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதுதானே. எனினும் இந்த அமைதிப் புரட்சி போதுமான கவனத்தைப் பெறவே இல்லை.

ஜன் தன் திட்டம் ஏழைமக்களின் திறன்களையும் மாற்றியமைத்துள்ளது. இப்போது அவர்கள் மின்னணுமுறையில் பணம் பெறவும் செலுத்தவும் செய்கின்றனர். ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர் ஒவ்வொருவரும் கடன் அட்டை பெறத்தகுதியுள்ளவர். இந்திய வங்கிகள் கைப்பேசி (மொலைப்போன்) அடிப்படை ATM என்பது பணம் பெறுவது போன்ற எளிய வங்கிப் பணிகளை கைக்கருவிகள் மூலம் செயல்படுத்துவது ஆகும். ஜன் தன் திட்டமும் ‘ரூபே’ கடன் அட்டையும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சந்தையில் ஆரோக்கியமான போட்டியை தொடங்கி விட்டது. இச்சந்தை பாரம்பரியமாக சில சர்வதேச நிறுவனங்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்டது. ஒருவருடம் முன்புவரை இச்சந்தையில் உள்ளாட்டு கார்டுகள் இல்லை என்றே கூறலாம். தற்போது இந்தியாவின் 36 சதவீதம் டெபிட் கார்டுகள் ‘ரூபே’ கார்டுகள் தான்.

நிதி அமைப்புகளில் அனைவரையும் இணைப்பது என்பது வங்கிக் கணக்குகள் தொடங்குவதும், மின்னணு பணம் செலுத்து திறனைப் பெற்றுத் தருவது மட்டுமல்ல. இந்தியாவில் தொழில் முனைவுத் திறன் அபரிமிதமாக உள்ளது என்பதே எனது உறுதியான நம்பிக்கை. இத்திறனை முழுவதும் பயன்படுத்தினால்தான் நமது நாடு வேலைதேடும் நாடு என்பதற்கு பதிலாக வேலைவாய்ப்பு உருவாக்கும் நாடாக மாறும். நாங்கள் பதவி ஏற்றபோது, 5 கோடியே 80 லட்சம் நிறுவனம் அல்லாத அமைப்புகள் 12 கோடியே 80 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கின. இதில் 60 சதவீதம் அமைப்புகள் கிராமப்புறங்களில் உள்ளவை. 40 சதவீதக்கும் கூடுதலானவை பின்தங்கிய வகுப்பினருக்கும் 15 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷெட்யூல்ட் வகுப்பினர், பழங்குடியினருக்கும் சொந்தமானவை. ஆனால் அவற்றிற்கான நிதியில் மிகச் சிறிய அளவே வங்கிக் கடனாக இருந்தது. மிகப்பல நிறுவனங்கள் வங்கிக்கடன் பெறுவதே இல்லை. அதாவது அதிகபட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் அமைப்புகளுக்கு மிகக்குறைந்த வங்கிக் கடனே கிடைக்கிறது. ஜன் தன் திட்டம் வங்கியில் இணைய தேடும் வங்கிகளைக் கழித்து எளிய மற்றொரு சிர்த்திருத்தம் வங்கிக்கடன் பெறாதோருக்கு அதனைப் பெற்றுத் தருகிறது. புதிய நிதி உதவி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பினை நுண்ம தொழில் பிரிவு மேம்பாடு மற்றும் மறு நிதிஉதவி திட்டத்தின் கீழ் உருவாக்குகிறோம். இதுவே முத்ரா என அனைவராலும் அழைக்கப்படுகிறது. பிரதமர் முத்ரா திட்டத்தின் கீழ் ஏற்கனவே சிறு வர்த்தகத்திற்கு ரூ.38,000 கோடி (600 கோடி டாலர்) கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கடன்கள் ஒவ்வொன்றும் இரண்டே இரண்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக எடுத்துக் கொண்டாலும் 1 கோடியே 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லலாம். பதிவு நிறுவனங்களில் ரூ.2,00,000/- கோடி முதலீடு செய்தாலும் இவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகாது. மற்றொரு திட்டத்தையும் தொடங்கி உள்ளோம். இதில் ஒவ்வொரு வங்கியின் ஒவ்வொரு கிளையும், அதாவது 1 லட்சத்து 25 ஆயிரம் வங்கிக் கிளைகளும், தலித் அல்லது பழங்குடியினத்தவர் மற்றும் பெண்ணுக்கு வர்த்தகம் தொடங்க கடன் உதவி வழங்க வேண்டும் என்பதே அது. புதுமை படைப்பதற்கும், புது தொழில் தொடங்கப்படுவதற்கும் என அதில் புதுமைப் படைப்பு இயக்கம், சுயவேலைவாய்ப்பு மற்றும் திறன் பயன்பாட்டுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

மற்றொரு நிதிச் சீர்த்திருத்தமாக புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டம் மூலமான பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் ஆகியன கொண்ட குறைந்த செலவினத்திலானா மானியமற்ற திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சார்ந்தவை என்பதால் அவற்றின் பிரிமியம் தொகை குறைவாக உள்ளது. இவற்றில் 12 கோடிப் பேர் சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர்.

இச்சீர்த்திருத்தங்களில் பல வெற்றி பெற வலுவான வங்கி அமைப்புகள் தேவைப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளின் நியமனங்களிலும் வங்கி முறைகள் மேற்கொள்வதிலும் ஊழலும் வேண்டியோருக்கு சலுகை முறையும் தலைவிரித்தாடும் அமைப்பு ஒன்றே நாங்கள் பொறுப்பேற்றபோது எங்களுக்கு கிடைத்தது. பிரதமர் வங்கியாளர்களுடன் நடத்திய ’ஞானசங்கம்’ எனப்படும் கூட்டத்தில் இதனை மாற்றியமைப்பதற்கான உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டன. தெளிவான செயல்திறன் நடவடிக்கைகள், பொறுப்பு ஏற்க வைக்கும் அமைப்புகள் உள்ளிட்ட திறம்பட்ட செயல்நிலை மேம்பாட்டுக்கான முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போதுமான மூலதனம் கிடைப்பது எங்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவைத் தவிர நிதி சாராத நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கி முடிவுகளில் வெளி நிர்ப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. நியமனங்களுக்கென புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. வங்கி வாரியங்கள் பீரோ என்ற அமைப்பு வங்கிகளின் தலைமைக்கு திறமையுள்ள வங்கியாளர்களை நியமித்துள்ளது. 46 ஆண்டுகளுக்கு முன் வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக, தனியார் துறையின் நிபுணர்கள் வங்கிகளின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு பெரிய சீர்த்திருத்தம் ஆகும்.

ஏழ்மை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட பல அமைப்புகள் உள்ளன. இவற்றை ஏழ்மை அகற்றும் தொழில் என அழைக்கலாம். நோக்கம் நல்லதாகவே தோன்றுகிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்களும் மான்யங்களும் முக்கிய பங்கு பெறுபவைதான். எனினும் ஏழை மக்களுக்கு அதிகாரமளிப்பது ஏழ்மை அகற்றும் தொழில்களுக்கு அதிகாரமளிப்பதைவிட மிகச்சிறந்து. எமது பொருளாதார சீர்த்திருத்தம் ஏழை மக்களுக்கு அதிகாரமளித்து ஏழ்மையை அவர்களாகவே எதிர்த்து போராடச் செய்கிறது. நான் வீடு ஒன்றினை உதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். அடித்தளமும் அடிப்படை அமைப்புகளும் செலவினத்தில் ஒரு பங்கினை எடுத்துக் கொள்கிறது. அடுத்தது (தளம்) அறைகலன்கள், மின்கலன்கள் போன்ற வசதிகள் அடித்தளமும் கட்டமைப்பும் வலுவற்றத்தாயிருக்கும்போது ஆழமான தரை ஓடுகள், அறைகலன்கள், மின்கலன்கள், திரைச்சீலைகள் ஆகிய அனைத்தும் நீண்ட காலம் பயன்படப்போவதில்லை. அதைப்போல, நிதிச்சேவையில் அனைவரையும் இணைத்துச் செயல்படுதல், சமூகப்பாதுகாப்பு மூலம் ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதே நிலையான நீண்டகாலத் தீர்வாக அமையும்.

இப்போது பல்வேறு துறைகளில் கட்டுமான சீர்த்திருத்தம் பற்றி பார்க்கலாம். வாழ்வாதாரத்தை வழங்குதல் இந்தியாவின் நங்கூரமாக இருப்பது விவசாயம். அதில் தொடர்ச்சியான சீர்த்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். மானிய விலை உரங்களை வேதிப்பொருள்கள் செய்வதற்கு திருப்பிவிடும் போக்கு இருந்தது. இதற்கு மிக எளிமையான ஆனால் திறம்பட்ட தீர்வு உரங்களுக்கு வேப்பஞ்சாயம் பூசுவதாகும். இதனால் உரங்கள் திருப்பிவிடப்படுவதற்கு தகுதியற்றதாகிவிடுகிறது. இது சிறிய அளவில் முன்பே முயற்சி செய்தி பார்க்கப்பட்டது. இப்போது யூரியா முழுவதும் வேப்பஞ்சாயம் பூசப்பட உள்ளது. இதனால் மானியங்களிலிருந்து பல கோடி ரூபாய்கள் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ளது. எளிய சீர்த்திருத்தங்கள் எவ்வளவு திறம்பட்டதாக உள்ளன என்பதற்கு இது உதாரணம்.

நாடு முழுவதும் மண்வள (மண் சுகாதார) அட்டை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் இதனால் தங்களது மண்ணின் நிலைமையை அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் விவசாயிகள் சரியான அளவு சரியான கலவை இரு பொருட்களை தெரிவு செய்ய முடிகிறது. இதனால் இருபொருள் சேதாரம் தவிர்க்கப்படுகிறது; பயிர் மகசூல் பெருகுகிறது; நுகர்வோரின் உடல் நலத்தைப் பாதுகாக்கிறது. 14 கோடி மண் சுகாதார அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு 25 கோடி மண் மாதிரி சேகரிக்கப்படும். இவை நாடெங்கும் உள்ள 1500 சோதனைச்சாலைகளில் பரிசோதிக்கப்படும். ஏறத்தாழ 40 லட்சம் மாதிரிகள் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுவிட்டன. இதுவும் மாற்றத்திற்கான சீர்த்திருத்தமே.

அனைவருக்கும் வீடு திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். உலகின் மாபெரும் திட்டமாகும் இது. இது நகரில் 2 கோடி வீடுகளும் கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகளும் கட்டுவது தொடர்பானது. இதனால் வீடு இல்லாத இந்தியா இல்லை என்ற நிலை உருவாகும். இதனால் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகும்; ஓரளவு திறன்படைத்தோர், திறன் இல்லாதோர், ஏழை மக்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த பல நோக்கத் திட்டமும் மாற்றம் உருவாக்கும் சீர்த்திருத்தம்தான்.

இந்தியாவின் தொழிலாளர் சந்தை குறித்து அதிகம் பேசப்படுகிறது. இத்துறையிலும் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அமைப்பு சார்ந்த துறையின் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றுக்கு செல்லும்போது வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட இதர நன்மைகளைப் பெறுவது கடினமாக இருந்தது. ஒரு வேலை வழங்குவோரிடம் சேமிக்கப்பட்ட வைப்புநிதி வேறு ஒரு வேலை வழங்குவோருக்குச் செல்லும்போது கணக்கு வைப்பது கடனமாக இருந்தது. நாம் தற்போது யூனிவர்சல் கணக்கு எண் (UAN) அறிமுகம் செய்துள்ளோம். இது ஊழியரிடம் எப்போதும் இருக்கும். வேறு ஒரு வேலை அளிப்போரிடம் போகும்போது அது தொடரும். இது தொழிலாளர் இடம் மாறுவதை எளிதாக்கியுள்ளது. வேலை வழங்குவோருக்கும் நடைமுறை எளிதாகும்.

நாம் மேலும் ஒருபடி சென்றுள்ளோம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அதிகாரமளிப்பது தொடங்கியுள்ளது. அவர்களுக்கு UAN எண் வழங்கப்படும். இதனால் சில குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்பு இவர்களுக்கு கிடைக்கும். பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் தொழிலாளர் தரத்தில் நல்ல பாதிப்பை இது ஏற்படுத்தும்.

நான் பிரதமராவதற்கு முன்னர், இந்தியாவில் தேவைப்படும் சீர்த்திருத்தம் பற்றி பல பொருளாதார நிபுணர்களிடம் கேட்டறிந்துள்ளேன். எனினும் எவரும் சுத்தம், ‘தூய்மை, சுகாதாரம்’ பற்றி குறிப்பிடவில்லை. சுகாதாரமின்மை நீண்ட காலமாக நிலை பெற்றிருந்ததால் பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டது. நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. அது பட்ஜெட், திட்டங்கள், செலவினம் என்றே பார்க்கப்பட்டது. எனினும் நீங்கள் நன்கு அறிவீர்கள். மோசமான சுகாதார நிலை தூய்மை இன்மை ஆகியன சுகாதார பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை நமது நலத்தின் ஒவ்வொரு சமயத்தையும் சார்ந்தது அது. மகளிருக்கு அது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது ஸ்வச் பாரத் அல்லது தூய்மை இந்தியா இயக்கம் சுகாதாம் மற்றும் தூய்மையுடன் மகளிரின் நிலையை பாதுகாப்பை உயர்த்தும். எல்லாவற்றிற்கும் மேலாக நன்றாக இருத்தல் அனைத்து அம்சங்களையும் தொடும். இந்தச் சீர்த்திருத்தம் வெற்றி பெற்றால், அது வெற்றி பெறும் என நான் நம்புகிறேன். இந்தியா பெரும் மாற்றத்தைப் பெற்றுவிடும்.

போக்குவரத்து துறையில் பெரிய அளவு நிர்வாகச் சீர்த்திருத்தம் மேற்கொண்டுள்ளோம். எமது பெரிய துறைமுகங்கள் 5 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளன. செலவின வருவாயில் 11 சதவீதம் உயர்வு அடையப்பட்டுள்ளது. உலக அளவில் வர்த்தக அளவு குறைந்துள்ள 2014-15ம் ஆண்டிலும் இது நமக்கு சாத்தியமாகி உள்ளது. கப்பல் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2013-14ல் அதன் நஷ்டம் ரூ.275 கோடி. 2014-15ல் இது மாறி இக்கழகம் ரூ.201 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது ஓராண்டில் ரூ.500 கோடி வருவாய் உயர்வு புதிய சாலை அமைப்புத் திட்டங்களுக்கான அனுமதி 2012-13ல் நாள் ஒன்றுக்கு 5.2 கி.மீ. எனவும் 2014-15ல் நாளொன்றுக்கு 8.7 கி.மீ. எனவும் இருந்து தற்போது 23.4 கி.மீ. என உயர்ந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் இத்தகைய நிர்வாகச் சீர்த்திருத்தம் பல மடங்கு பெருக்கத் தன்மைக்கு அடிகோலி ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும்.

மற்றொரு நடவடிக்கையாக செத்துப்போன பணத்தை இணைப்பதற்கு அதனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது ஆகும். சிறந்த உதாரணம் தங்கம் தங்கத்துடன் இணைந்த பண்பாட்டு உறவுக்குப் பெயர்போனது இந்தியா. பொருளாதார நிபுணர்கள் என்ற வகையில் இந்த பண்பாட்டு உறவு ஒரு சிறந்த பொருளாதார அடிப்படை கொண்டது என்பதை உணருவீர்கள். இந்தியாவில் அடிக்கடி உயர் பணவீக்கம் வருவதுண்டு. பண வீக்கத்திற்கு எதிரான இயற்கை வேலி தங்கம் – மேலும் அது எளிதாக எடுத்துச்செல்லக்கூடிய மதிப்புள்ள பொருள். இதன் எடுத்துச்செல்லும் திறனும் பயன்பாடும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதாக விளங்குகிறது. ஏனெனில் அவர்களே தங்க நகைகளின் முக்கிய சொந்தக்காரர்கள். எனினும் பொருளாதார நுண்ம நிலை நன்மையான இது பெரும பொருளாதாரத்தின் கேடு எனலாம். இதனால் பெரிய அளவு தங்கம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. தங்கம் தொடர்பான பல திட்டங்களை நாம் தொடங்கியுள்ளோம். இதனால் இந்தியர்களுக்கு பணவீக்கப் பாதுகாப்பான தங்கம் ஓரளவு வட்டியுடன் வழங்கப்படுகிறது, அதனைக் கையில் பெறாமலேயே இத்திட்டம் எதிர்பார்த்த அளவினை அடைந்தால் பொதுமக்களின் தங்கம் தொடர்பான எதிர்பார்ப்பு நிறைவேறும். அதேசமயம் தங்கம் இறக்குமதி குறையும். உறுதியாக இதுவும் மாற்றத்தை உண்டாக்கும் திறன்பெற்ற சீர்த்திருத்தமே.

அடுத்து நான் நிறுவனம் மற்றும் ஆட்சிமுறை சீர்த்திருத்தம் பற்றி பார்ப்போம். பல ஆண்டுகளாக திட்டக்குழு பற்றி விரிவாக குறைகூறப்பட்டு வந்தது. அது பொதுவாக மிக மெதுவாக செயல்படும் மத்திய அமைப்பின் சக்தியாகவும் மாநிலங்களின் மீது மத்திய ஆதிக்கத்தைத் தெரிவிப்பதாகும். பார்க்கப்பட்டது; இதனை மிக அதிகமாகக் குறை கூறியவர்கள் சற்றுமுன்வரை அதனை வெறுத்து வந்தவர்களில் சில; திடீரென அதன்மீது சொந்த ஊர்ப் பாசத்தைக் காண்பிப்பது வேறு ஒரு விசயம். ஆட்சிக்கு வந்தவுடன் நாம் வேறு ஒரு நிறுவனத்தைக் கொண்டு வந்துள்ளோம். இந்தியாவை மாற்றியமைப்பதற்கான தேசிய நிறுவனம், நித்தி ஆயோக் என்பதுவே அது. நித்தி ஆயோக் குறித்த எனது நெடுநோக்கு திட்டக்குழுவிற்கு முற்றிலும் வேறுபட்டது. இது கருத்துகளுக்கும் செயல்பாடுகளுக்குமான ஒத்துழைப்பு அமைப்பு. இதில் மாநிலங்கள் முழுமையான உறுப்பினர்கள் இதில் மத்திய மாநில அரசுகள் கூட்டுறவு சம்ஷ்டி அடிப்படையில் ஒத்துழைக்கின்றன. சிலர் நினைத்தனர். இது ஒரு கோஷமிடல் தந்திரம் என்று. ஆனால் நம்மிடம் மாற்றம் ஏற்படுத்தும் சக்திக்கான உறுதியான உதாரணங்கள் உள்ளன. இதனை விவரிக்கிறேன்.

நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள், 14-வது நிதிக்குழு மாநிலங்களுக்கு மத்திய வருவாயில் கூடுதல் பங்கினை தானே சேரும் பங்காகத் தர வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. இதற்கு எதிராக எனக்கு ஆலோசனை செய்யப்பட்ட போதும் இதனை நான் ஏற்றுக் கொண்டேன். இதனால் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தும் திட்டங்களாக மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. முதலாவது 5 ஆண்டுத் திட்ட காலம் தொட்டு அதாவது 1952 முதல் இத்தகைய முடிவுகள் மத்திய அரசே ஒருதலைப்பட்சமாக எடுத்து வந்தது. நாங்கள் மிக வித்தியாசமான ஒன்றைச் செய்தோம். மத்திய அரசு சார்ந்த திட்டங்களின் பங்கு விகிதாச்சாரத்தை மத்திய அமைச்சர்கள் குழு இறுதி செய்வதற்கு பதிலாக நித்தி அமைப்பில் உள்ள முதலமைச்சர்களைக் கொண்ட துணைக்குழு இது குறித்து முடிவெடுத்தது. கூட்டுறவு அமைப்பின் சிறந்த உதாரணம் என்கின்ற வகையில் முதலமைச்சர்கள் துணைக்குழு ஒருமனதாக சில பரிந்துரைகளை ஏற்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பிரச்சினை மிகவும் சிக்கலானது, குழுவினர் வேவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதை மீறி இந்த ஒருமித்த உடன்பாடு ஏற்பட்டது. இவர்கள் அறிக்கை எனக்கு அக்டோபர் 27-ல் கிடைத்தது. அதே நாளில் நிதிப்பகிர்வு முறை குறித்த முககிய பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதறகு எழுத்துமூல உத்தரவு அடுத்த நாள் பிறப்பிக்கப்ட்டது. மேலும் பல பிரச்சினைகளில் முதலமைச்சர்கள் அலுவல்பட்டியலைத் தயாரிப்பதில் முன்னிலையில் உள்ளனர். நிறுவனத்தை சீர்த்திருத்தி அதன்மூலம் உறவுகளை மாற்றியமைத்துள்ளோம்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம், எளிதாக வர்த்தகம் செய்தல் ஆகியவற்றில் நமது பணிகளை அனைவரும் நன்கறிவர். உலக வர்த்தக மந்தகதியின் பின்னணியில் நமது இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்ட உந்துதலைக் காண வேண்டும். வர்த்தக வளர்ச்சி வீதம் உள்ளாட்சி மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை விஞ்சியது, 1983-ல் இருந்து 2008 வரை. அதன் பிறகு வர்த்தகம் ஜி.டி.பி-ஐவிட பின்தங்கிவிட்டது. எனவே உள்ளாட்டு நுகர்வுக்கு உற்பத்தி என்பது வளர்ளச்சிக்கு முக்கியமானது.

உலக வங்கியின் வர்த்தகம் புரிதல் ஆய்வில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இதில் புதிய அம்சம் என்னவெனில் மாநிலங்களுக்கிடையே மிக ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான போட்டி ஏற்பட்டிருப்பதே ஆகும். ஜார்க்ண்ட், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக உள்ளன என்பது ஆச்சரியமான விசயம். இது ஆக்கப்பூர்வ போட்டியிடும் கூட்டாட்சி அமைப்புக்கு உதாரணம்.

பாரம்பரியமான 65 ஆண்டு கால நடைமுறைக்கு மாற்றாக வெளியுறவு விசயங்களிலும் மாநிலங்களை ஈடுபடுத்தியுள்ளோம். வெளியுறவு அமைச்சகம் மாநிலங்களுடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான் சீனா பயணம் மேற்கொண்டபோது மாநிலத்திற்கு மாநிலம் ஏற்றுமதி வளர்ச்சிக்குழுக்கள் அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். உலக அளவில் சிந்திக்குமாறு மாநிலங்களை மாற்றுவது மேலும் ஒரு சீர்த்திருத்தம். மாற்றத்தை நோக்கிய சீர்த்திருத்தம்.

இந்திய மக்கள் நல்ல முதிர்ச்சியடைந்தவர்கள், பொது நலத்தில் அக்கறை கொண்டவர்கள். நாற்காலி விமர்சகர்களும் நிபுணர்களும் சொல்வதற்கு மேலான அளவு இக்குணம் கொண்டவர்கள் அவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அரசுக்கும் குடிமக்களுக்குமிடையே பரஸ்பர நம்பிக்கை என்பது முக்கியமான ஆட்சிமுறை பிரச்சினை. இவ்வகையில் தொடக்கமாக மக்கள் மேல் அரசுக்கு உள்ள நம்பிக்கையை எதிரொலிக்கும் வகையில் கையெழுத்துக்கு சாட்சி மேலோப்பம் இடும் முறையை அகற்றியுள்ளோம். உதாரணமாக உயர்கல்வித்துறை மாணவர்கள் தங்கள் அலுவல்களை சேர்க்கை காலங்களில் தாங்களே சான்று மேலொப்பம் செய்து அனுப்புவதை ஏற்றுக் கொண்டுள்ளது. ஓய்வு ஊதியதாரர்கள் உயிருடன் உள்ளதற்கு சான்றளிக்க அரசு அலுவலகங்களுக்குச் செல்லுவதை முடிவுக்கு கொண்டுவர ஆன்லைன் கைரேகை பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர்கள் மக்கள் தங்கள் சுய நலன் கருதியே செயல்படுவதாக பாரம்பரியமாக நம்பி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் தாமாக முன்வந்து கொண்டு பாரம்பரியமானது, சமையல் எரிவாயு மானியத்தை தாமாகவே விட்டுக் கொடுக்கும் படியான ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்து உள்ளோம். தாமாக விட்டுக் கொடுத்த சமையல் எரிவாயு இணைப்பு அத்தகைய இணைப்பு இல்லாத ஏழை மக்களில் ஒருவருக்கு கொடுக்கப்படும் என உறுதி அளித்தோம். இதனால் விறகு அடுப்பெரித்து சுகாதாரக்கேடுக்கு உள்ளாகும் பல ஏழைப் பெண்கள் அதிலிருந்து விடுபடுவர் என்று வலியுறுத்தி கூறுகிறோம். இதற்கு மிகப் பிரமாத வரவேற்பு இருந்தது. 4 மாதங்களில் 40 லட்சம் இந்தியர்கள் தங்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்து உள்ளனர். இதில் பலர் பணக்காரர்கள் அல்லர்; நடுத்தர வருமான வரம்பில் உள்ளவர்கள். இந்த அறையில் எவராவது இன்னும் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருந்தால் அந்த நல்ல உள்ளங்களுடன் இணையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதனை அடுத்து எங்களது மிக மோசமான விமர்சகர்களும் ஏற்றுக் கொள்ளும் எங்களது ஒரு சாதனையைச் செய்வேன். ஊழல் நிலவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே அது. வளரும் பொருளாதாரங்களில் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக இருப்பவற்றில் ஒன்று ஊழல் என்று பொருளாதார வல்லுநர்களும் பிற நிபுணர்களும் மிகப் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றனர். ஊழலை கட்டுப்படுத்த றுதியான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பொதுத்துறை வங்கிகளில் இதுகுறித்து என்ன செய்துள்ளோம் என ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மற்றொரு முக்கிய சீர்திருத்தம் நன்கறியப்பட்டது. முக்கிய ஆதாரங்களை ஒதுக்கீடு செய்வதில் விருப்ப ஒதுக்கீடுகளை அகற்றியிருப்பதுவே அது. நிலக்கரி, அலைக்கற்றை, பண்பலை வானொலி ஆகியவற்றின் ஏலம் பெரிய அளவில் கூடுதல் வருவாயை ஈட்டித் தந்துள்ளது. நிலக்கரியைப் பொறுத்தவரை இதனால் பயனடைந்தது சில மிக ஏழையான மாநிலங்கள்தான. அவற்றுக்கு மேம்பாட்டுக்கு வேறு ஆதாரங்கள் ஏதும் இல்லை.

அரசின் கீழ்நிலை பணிகளுக்கு ஆள்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகள் ஊழலின் ஆதாரங்கள் என பரவலாகப் பேசப்படுகிறது. இத்தகைய பதவிகளுக்கு நேர்முகத் தேர்வினை சமீபத்தில் அகற்றி இருக்கிறோம். வெளிப்படையான எழுத்துத் தேர்வு மூலம் இதற்கு தேர்வு செய்யப்படும். வரி ஏய்ப்பு, கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குதலுக்கு எதிரான எங்கள் இயக்கத்தை அனைவரும் அறிவர். கருப்புப் பணச்சட்டம் வருவதற்கு முன் ரூ.6500 கோடி வரிக்கென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி ரூ.4000 கோடி அளவுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக மொத்தம் ரூ10500 கோடி வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த்து கண்டுபிடிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நல்ல நடத்தையும் வெளிப்படைத்தன்மையும் தொடர்ந்து பேணப்பட்டால் அதைவிடச் சிறந்த மாற்றத்திற்கான சீர்திருத்தம் ஏது?

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு சேவை செய்ய பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். தற்போது மின்னணு முறையில் வரிகளுக்கு அனுப்புவோர் 85 சதவீதம் பேராக உள்ளனர். முன்னர் மின்னணு முறையில் அனுப்பினாலும் காகித ஆவணங்கள் சரிபார்ப்பு நடந்தாக வேண்டும், இது பல வார காலம் பிடிக்கும். இந்த ஆண்டு முதல் ஆதார் பயன்படுத்தி மின்னணு சரிபார்ப்பு முறையை அறிமுகம் செய்துள்ளோம். 40 லட்சத்துக்கும் அதிகமான வரிசெலுத்துவோர் இவ்வசதியைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்களை பொறுத்தவரை இது எளிதானது, மின்னணுவயப்பட்டது, வேகமாக முடிக்கக் கூடியது. காகித ஆவணம் ஏதும் தேவையில்லை. இந்த ஆண்டு மின்னணு வரி சமர்ப்பிப்புகளில் 91 சதவீதம் 90 நாட்களுக்குள் முடிக்கப்பட்டது. சென்ற ஆண்டு இது 46 சதவீதம்தான். ஏறக்குறைய 90 சதவீதம் நிதி திருப்பி அளிப்பது 90 நாட்களுக்குள் முடிவடைந்தது. வருமான வரி கணக்கு மட்டுமின்றி அதன் மீதான ஆய்வையும் அலுவலகம் வராமலேயே முடித்துக கொள்ளும் நிலையை உருவாக்குமாறு வருமான வரித்துறையை கேட்டுக் கொண்டுள்ளேன்.

கேள்விகளை மின்னணு முறையிலோ ஈ-மெயில் வாயிலாகவே கேட்டு பதிலைப் பெறுவதே அது. மின்னணு முறையில் கணக்குகள் செல்லும் பாதை அதாவது எது நிலுவையில் உள்ளது, யாரிடம், எங்கே, எவ்வளவு காலமாக தெளிவாகத் தெரியும் வகையில் இருக்கவேண்டும். வருமானவரி அதிகாரிகளின் செயல்திற மதிப்பீட்டு முறையை மாற்றுமாறும் கேட்டுள்ளேன். இதில் சார்ந்த அதிகாரியின் உத்தரவுகள், மதிப்பீடுகள் மேல்முறையீட்டின்போது ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்ற விவரம் இடம்பெற்றிருக்க வேண்டும். இது ஊழல் செய்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பதுடன், சரியான உத்தரவு பிறப்பிப்பதை ஊக்குவிக்கும். ஆன் லைன் கணக்கு ஆய்வு, செயல்திறன் மதிப்பீடு முறை மாற்றம் ஆகியன முழுமையாக செயல்பட்டால் மாற்றம் விளைவிக்கும் திறன்மிக்கவை ஆகும்.

இது பெருமக்களின் கூட்டம். உங்களுக்கு ஆர்வமூட்டும், சிந்தனைகளை தூண்டும் பல அமர்வுகள் காத்திருக்கின்றன. பாரம்பரிய பரிகாரங்களுக்கு அப்பாற்பட்டு சிந்தியுங்கள் என்பதே எனது வேண்டுகோள். சில தரத்திற்கு உட்பட்ட கருத்துகளுடன் சீர்திருத்த யோசனைகளை நிறுத்தி விட வேண்டாம். சீர்திருத்தம் பற்றிய நமது கருத்து அனைவரையும் உள்ளடக்கியதாக விரிவானதாக இருக்க வேண்டும். சீர்திருத்தங்கள் நோக்கம் செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெற அல்ல. நமது மக்களுக்கு மேலும் நல்ல வாழ்வு அளிப்பதேயாகும். உங்கள் அறிவுப் பின்னணியில் மேலும் சிறந்த கருத்துகளை வெளிப்படுத்துவீர்கள் என நம்புகிறேன். மேலும் பல மாற்றங்களுக்கான சீர்திருத்த யோசனைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். இதனால் இந்தியா முழுமையிலும் வாழ்க்கைத் தரம் உயரும், அதனால் இந்தியாவில் நாம் மட்டுமின்றி அகில உலகமே நன்மையடையும்.

நன்றி.

*****