தில்லியில் இம்மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தலைமைச் செயலாளர்களின் மூன்றாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். முதல் மாநாடு ஜூன் 2022-ல் தர்மசாலாவிலும், இரண்டாவது மாநாடு ஜனவரி 2023-ல் தில்லியிலும் நடைபெற்றது.
கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை செயல்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பங்கேற்பு நிர்வாகம் மற்றும் கூட்டாண்மையை ஊக்குவிப்பதற்காக தலைமைச் செயலாளர்களின் தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தலைமைச் செயலாளர்களின் தேசிய மாநாடு, டிசம்பர் 27 முதல் 29 வரை நடைபெற உள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அரசின் பிரதிநிதிகள், அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு தலைமைச் செயலாளர்களின் தேசிய மாநாட்டில் ‘மக்களுக்கு எளிதான வாழ்க்கையை’ வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்தப்படும். மாநிலங்களுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு பொதுவான வளர்ச்சித் திட்டம் மற்றும் செயல் திட்டத்தை உருவாக்குவதுடன், இதனைச் செயல்படுத்துவது குறித்தும் இந்த மாநாடு வலியுறுத்தும்.
நலத்திட்டங்களை எளிதில் அணுகுதல், சேவை வழங்குவதில் தரம் ஆகியவற்றுக்கு இந்த மாநாட்டில் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, விவாதிக்கப்படும். நிலம் மற்றும் சொத்து; மின்சாரம்; குடிநீர்; உடல்நலம்; பள்ளிக்கல்வி ஆகியவை ஐந்து துணை கருப்பொருள்கள் ஆகும். இவை தவிர, சைபர் பாதுகாப்பு: வளர்ந்து வரும் சவால்கள் என்ற தலைப்பில் சிறப்பு அமர்வுகளும் நடத்தப்படும்; செயற்கை நுண்ணறிவு பற்றிய பார்வைகள், முன்னேறும் ஆர்வமுள்ள தொகுதி மற்றும் மாவட்ட திட்டம்; மாநிலங்களின் பங்கு: திட்டங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களைச் சீரமைத்தல், மூலதன செலவினங்களை அதிகரித்தல்; நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு: சவால்கள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்படும்.
இவை தவிர, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்தும் கவனம் செலுத்தப்படும்; அமிர்த நீர்நிலைகள்; சுற்றுலா மேம்பாடு, பிராண்டிங் மற்றும் மாநிலங்களின் பங்கு; பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் & பிரதமர் ஸ்வநிதி திட்டம் என ஒவ்வொரு கருப்பொருளின் கீழும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சிறந்த நடைமுறைகளும் மாநாட்டில் முன்வைக்கப்படும். இதன் மூலம் மாநிலங்கள் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு மாநிலத்தில் அடைந்த வெற்றியைப் பிரதிபலிக்க முடியும்.
***
(Release ID: 1990590)
ANU/SMB/PKV/RR