பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர்களுக்கான பொதுப்பிரிவு குடியிருப்பு பகுதிகளை குடியிருப்புகளை மறு கட்டமைப்பு செய்ய ஒப்புதல் அளித்தது. தேசிய கட்டிட கட்டுமானக் கழகம், சரோஜினி நகர், நேதாஜி நகர் மற்றும் நவுரோஜி நகர் ஆகிய இடங்களில் உள்ள காலனிகளையும், மத்திய பொதுப்பணித் துறை கஸ்தூர்பா நகர், தியாகராஜ் நகர், ஸ்ரீனிவாசபுரி மற்றும் முகமதுபூர் ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகளின் கட்டுமானத்தையும் ஏற்கும். தற்போது இருக்கும் 7,49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவுள்ள 1 முதல் 6 வகையான 12,970 வீடுகள் 29.18 லட்சம் சதுர மீட்டரில் 25,667 வீடுகளாக கட்டப்படும்,
இத்திட்டத்தின் கீழ் நேதாஜி நகரில் 2.42 லட்சம் சதுர மீட்டருக்கு அலுவலகப் பயன்களுக்கான கட்டிடங்களையும் கட்டி முடிக்கப்படும்.
இத்திட்டத்துக்கான உத்தேச மதிப்பு, 30 ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவையும் சேர்த்து 32,835 கோடியாகும். சுய முதலீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் இத்திட்டம் நவுரோஜி நகர் மற்றும் சரோஜினி நகர் ஆகிய இடங்களில் வணிக ரீதியான இடங்களை விற்பனை செய்வதன் மூலம் வரும நிதியில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் படிப்படியாக முடிக்கப்படும்.
பின்னணி :
தற்போது தேசிய தலைநகரில் அரசு குடியிருப்புகளுக்கான பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக அரசு அதிகாரிகள் வீடின்றி காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை, தற்போது உள்ள பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, நவீன கட்டுமான தொழில்நுட்பத்தையும், பசுமை வீட்டுத் திட்ட அடிப்படையிலும், திடக்கழிவு மேலாண்மை அடிப்படையில் தில்லி மாஸ்டர் பிளான் 2021 அடிப்படையிலும் கட்டலாம் என்று கருத்துரு அனுப்பியது.