Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு புத்ததேவ் தாஸ்குப்தாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


திரைப்பட இயக்குநர், சிந்தனையாளர் மற்றும் கவிஞரான திரு புத்ததேவ் தாஸ்குப்தாவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான சுட்டுரைச் செய்தியில், “திரு புத்ததேவ் தாஸ்குப்தாவின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது பன்முகத் தன்மை வாய்ந்த படைப்புகள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர், புகழ்பெற்ற சிந்தனையாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். இந்த சோகமான தருணத்தில் அன்னாரது குடும்பத்தினருக்கும், ஏராளமான ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

                                                —–