Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு பில் கேட்ஸ் இன்று பிரதமரைச் சந்தித்தார்


திரு பில் கேட்ஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார். இந்தியாவின் வளர்ச்சி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகள்சுகாதாரம், விவசாயம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் அற்புதமான முன்னேற்றங்கள்  குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடியுடன்  அற்புதமான ஆலோசனையை மேற்கொண்டதாக திரு பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

தொழில்நுட்பம், புதுமைப் படைப்பு, நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும், வருங்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது குறித்தும் திரு பில் கேட்ஸுடன் பேசியதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள  பதிவில் கூறியிருப்பதாவது:

எப்போதும் போல, பில் கேட்ஸுடன்  மிகச் சிறப்பான சந்திப்பை மேற்கொண்டேன். வரும் தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.”

***

TS/PLM/AG/DL