திரு பவானி சிங் அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், உத்திரப்பிரதேச பாஜகவின் சஹ்–சங்கதன்மஹாமந்திரியான திரு பவானி சிங் அவர்களின் மறைவை அறிந்து பெரிதும் துயருற்றதாகத் தெரிவித்துள்ள பிரதமர், அன்னாரது மென்மையான மற்றும் கடினமாக உழைக்கும் தன்மையை நினைவு கூர்ந்துள்ளார். தான் சார்ந்துள்ள அமைப்புக்கு திரு பவானி சிங் ஆற்றியுள்ள பங்களிப்பையும், அவரது பொதுச் சேவையையும் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் தான் வேண்டுவதாகவும் பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.
उत्तर प्रदेश भाजपा के सह-संगठन महामंत्री भवानी सिंह जी के निधन से अत्यंत दुख हुआ है। उन्होंने राज्य में भाजपा को मजबूत करने में अपना बहुमूल्य योगदान दिया। विनम्र, कर्मठ भवानी सिंह जी का पूरा जीवन जनसेवा में समर्पित रहा है। ईश्वर दिवंगत आत्मा को शांति प्रदान करे। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) May 5, 2021