Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. நட்வர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. நட்வர் சிங் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அறிவாற்றல் மற்றும் சிறந்த எழுத்து திறமைக்குப் பெயர் பெற்ற  அவர், வெளியுறவுக் கொள்கையை ராஜீய ரீதியில் செயல்படுத்துவதில்   ஆற்றிய வளமான பங்களிப்புகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்,

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“திரு. நட்வர் சிங் அவர்கள்  மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ராஜதந்திரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை உலகிற்கு அவர் வளமான பங்களிப்புகளை வழங்கினார். அவர் தமது அறிவாற்றல் மற்றும் எழுத்துத் திறமைக்காகவும் அறியப்பட்டார். இந்தத் துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி.”

****

PKV/DL