Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு. ஜகதீஷ் தக்கர் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்


 

பிரதமர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்த திரு. ஜகதீஷ் தக்கர் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வந்த திரு. ஜகதீஷ் தக்கரின் மறைவு மிகவும் துயரத்தை அளிக்கிறது. குஜராத் மற்றும் தில்லி இரு இடங்களிலுமே மூத்த பத்திரிக்கையாளரான ஜகதீஷ் அவர்களுடன் பல வருடங்கள்  பணிபுரிந்த மகிழ்வு எனக்கு உண்டு. தனது எளிமை மற்றும் நற்பண்புக்கும் பெயர் பெற்றவர் அவர்.

பல ஆண்டுகளாக பல பத்திரிகையாளர்கள்  ஜகதீஷ் அவர்களுடன் கலந்துரையாடியிருப்பர். அவர் குஜராத்தின் முன்னாள் முதல் அமைச்சர்கள் பலருடன் பணிபுரிந்துள்ளார். தனது வேலையை முழு மனதுடனும் சிரத்தையுடனும் செய்த அற்புதமான மனிதரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கும் நலவிரும்பிகளுக்கும் எனது இரங்கல்கள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***

வி.கீ./ஸ்ரீ