திரு. சுந்தர்லால் பட்வாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றிய அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். திரு. பட்வா தமது வாழ்க்கை முழுவதையும் நாடு மற்றும் சமூகத்தின் தன்னலமற்ற சேவைக்காக அர்ப்பணித்ததாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பாஜகவை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்த சுந்தர்லால் பட்வா அவர்களின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு நான் அவருக்கு தலை வணங்குகிறேன். அவர் தமது வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் தன்னலமற்ற சேவை புரிவதற்காக அர்ப்பணித்தார். மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக, மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய திசையை உருவாக்க அவர் பணியாற்றினார். அமைப்பை வலுப்படுத்துவதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது பங்களிப்பு அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”
***
(Release ID: 2072263)
PKV/RR/KR
भाजपा को सींचने और संवारने में अहम भूमिका निभाने वाले सुंदरलाल पटवा जी को उनकी जन्म-शताब्दी पर मेरा नमन। उन्होंने अपना समस्त जीवन देश और समाज की निःस्वार्थ सेवा के लिए समर्पित कर दिया। मध्य प्रदेश के मुख्यमंत्री के रूप में उन्होंने प्रदेश के विकास को एक नई दिशा देने का काम किया।…
— Narendra Modi (@narendramodi) November 11, 2024