Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு கே வி சம்பத் குமாரின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்


சுதர்மா சமஸ்கிருத நாளிதழின் ஆசிரியரான திரு கே வி சம்பத் குமார் அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “திரு கே வி சம்பத் குமார் அவர்கள், சமஸ்கிருதத்தை பாதுகாப்பது மற்றும் பிரபலப்படுத்துவதற்காக குறிப்பாக இளைஞர்களிடையே எடுத்துச் செல்வதற்காக அயராது உழைத்த  எழுச்சியூட்டும் ஆளுமையாவார். அவரது ஆர்வமும், அர்பணிப்பும் அனைவருக்கும் ஊக்கமளித்தது. அன்னாரது மறைவினால் மிகவும் வருந்தினேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று கூறியுள்ளார்.

*****************