Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு.கேஷரி நாத் திரிபாதி மறைவுக்கு பிரதமர் இரங்கல்


மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநர்  திரு. கேஷரி நாத் திரிபாதி மறைவுக்கு   பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரிபாதி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது, கூடுதலாக பீஹார், மேகாலயா, மிஸோரம்  உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பையும் அவர் குறுகிய காலம் வகித்ததையும் நினைவுகூர்ந்துள்ளார்.  உத்தரபிரதேசத்தில் பிஜேபியை காலூன்றச் செய்ததில் திரிபாதியின் பங்கு முக்கியமானது எனவும்அம்மாநிலத்தின் மேம்பாட்டிற்காகக் கடினமாக உழைத்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்தமது சிறப்பான சேவை மற்றும் அறிவாற்றலுக்காக திரு. கேஷரி நாத் திரிபாதி என்றும் மதிக்கத்தக்கவர்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி  எனக் குறிப்பிட்டுள்ளார்.

*****

 

MS/ES/DL