திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவுகூர்ந்துள்ளார். இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.”
***
(Release ID: 1891487)
SMB/AG/RR
On Thiruvalluvar Day, I pay homage to the wise Thiruvalluvar and recall his noble thoughts. Diverse in nature, they are a source of great motivation for people from all walks of life. I would also urge the youth to read the Kural.
— Narendra Modi (@narendramodi) January 16, 2023
திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.
— Narendra Modi (@narendramodi) January 16, 2023