திருவள்ளுவர் தினமான இன்று மாபெரும் தத்துவஞானி, கவிஞர் மற்றும் சிந்தனையாளரான திருவள்ளுவரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில், திருவள்ளுவரின் குறள்கள் தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன; அவரது காலத்தால் அழியாத படைப்பான திருக்குறள், உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்வதுடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்த ஆழமான புரிதல்களை வழங்குகிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“திருவள்ளுவர் தினத்தில், நாட்டின் மிகச் சிறந்த தத்துவ ஞானிகள், கவிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான பெரும்புலவர் திருவள்ளுவரை நினைவு கூர்வோம். அவரது குறட்பாக்கள் தமிழ் கலாச்சாரத்தின் சாரத்தையும் நமது தத்துவ பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. அவரது போதனைகள் நேர்மை, கருணை மற்றும் நீதியை வலியுறுத்துகின்றன. காலத்தால் அழியாத அவரது படைப்பான திருக்குறள், உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்வதுடன் பல்வேறு பிரச்சினைகளில் ஆழமான புரிதல்களையும் வழங்குகிறது. சமூகத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் நாம் தொடர்ந்து கடினமாகப் பணியாற்றுவோம்.
—
SG/SV/KPG/KV
On Thiruvalluvar Day, we remember one of our land’s greatest philosophers, poets, and thinkers, the great Thiruvalluvar. His verses reflect the essence of Tamil culture and our philosophical heritage. His teachings emphasize righteousness, compassion, and justice. His timeless…
— Narendra Modi (@narendramodi) January 15, 2025
நமது நாட்டின் மிகச்சிறந்த தத்துவஞானிகள், புலவர்கள் மற்றும் சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரைத் திருவள்ளுவர் தினத்தில் நாம் நினைவுகூர்வோம். அவர் இயற்றிய திருக்குறள் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது. அவரது போதனைகள் நீதி, கருணை, நேர்மை…
— Narendra Modi (@narendramodi) January 15, 2025