கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம்- காசர்கோடு இடையிலான கேரளாவின் முதலாவது வந்தேபாரத் விரைவு ரயிலை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.04.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர், திருவனந்தபுரம்- காசர்கோடு இடையிலான வந்தே பாரத் விரைவு ரயிலை ஆய்வு செய்ததுடன், குழந்தைகளுடனும் ரயில் பயணிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, பட்டணம் திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்கள் வழியாக பயணிக்கும்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“கேரளாவின் முதலாவது வந்தே பாரத் விரைவு ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது திருவனந்தபுரம், காசர்கோடு இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும்.” இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
இதற்கான நிகழ்ச்சியில் பிரதமருடன் கேரள ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான், முதலமைச்சர் திரு பினராயி விஜயன், மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரும் பங்கேற்றனர்.
***
(Release ID: 1919437)
AD/PLM/RS/KRS
Flagged off Kerala’s first Vande Bharat Express, which will enhance connectivity from Thiruvananthapuram to Kasaragod. pic.twitter.com/u1RqG5SoVU
— Narendra Modi (@narendramodi) April 25, 2023
A memorable interaction on board the Vande Bharat Express. pic.twitter.com/Ym1KHM5huy
— Narendra Modi (@narendramodi) April 25, 2023