திரிபுரா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மாநிலம் உருவான தினத்தையொட்டி திரிபுரா மக்களுக்கு நல்வாழ்த்துக்கள். திரிபுராவின் வளர்ச்சிப் பயணத்திற்குக் கடந்த 5 ஆண்டுகள் மிகவும் சிறப்பானவை. வேளாண்மையிலிருந்து தொழில்துறை வரை, கல்வியிலிருந்து சுகாதாரம் வரை இம்மாநிலம் மகத்தான மாற்றத்தைக் கண்டுள்ளது. வரும் காலங்களில் இந்தப் போக்கு தொடரட்டும்.”
*****
SMB / DL
On their Statehood Day, best wishes to the people of Tripura. The last 5 years have been remarkable for Tripura’s growth trajectory. From agriculture to industry, education to health, the state has seen great transformation. May this trend continue in the coming times.
— Narendra Modi (@narendramodi) January 21, 2023