Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாவூதி போரா சமூகத்தின் மதத் தலைவர் குரு சயத்னா முபாதால் சைபுதீன் பிரதமருடன் சந்திப்பு

தாவூதி போரா சமூகத்தின் மதத் தலைவர் குரு சயத்னா முபாதால் சைபுதீன் பிரதமருடன் சந்திப்பு


தாவூதி போரா சமூகத்தின் மதத் தலைவர் குரு சயத்னா முபாதால் சைபுதீன் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று புது தில்லியில் சந்தித்தார். ஒன்பது பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவும் அவருடன் பிரதமரை சந்திக்க வந்திருந்தது.

தாவூதி போரா சமூகத்தினர் எடுத்துவரும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை பாராட்டிய பிரதமர், இவர்களது நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதி கூறினார். மும்பையில் உள்ள பேண்டி பஜாரை ஸ்மார்ட் நகரமாக மாற்ற தாவூதி போரா சமூகத்தினர் எடுத்துவரும் நடவடிக்கைகளையும் பிரதமர் பாராட்டினார்.

கங்கை கரையோரம் உள்ள கிராமங்களில் கழிவறை வசதி செய்து கொடுக்க தாவூதி போரா சமூகத்தினர் உதவ வேண்டும் என்று பிரதமர் வலியுறித்தினார்.

***