Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை

தாய்லாந்து, இலங்கை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதையொட்டி பிரதமர் வெளியிட்ட அறிக்கை


பிரதமர் திரு பெடோங்டாரன் ஷினவத்ராவின் அழைப்பை ஏற்று, அரசுமுறைப் பயணமாகவும், 6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவும் நான் இன்று தாய்லாந்து புறப்படுகிறேன்.

கடந்த பத்தாண்டுகளில், வங்காள விரிகுடா பிராந்தியத்தில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான குறிப்பிடத்தக்க அமைப்பாக பிம்ஸ்டெக் உருவெடுத்துள்ளது. அதன் புவியியல் இருப்பிடத்துடன், இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் பிம்ஸ்டெக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து, நமது மக்களின் நலனை மனதில் கொண்டு நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

எனது அரசுமுறைப் பயணத்தின் போது, பகிரப்பட்ட கலாச்சாரம், தத்துவம் மற்றும் ஆன்மீக சிந்தனை ஆகியவற்றின் வலுவான அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்ட நமது பழமையான வரலாற்று உறவுகளை மேம்படுத்துவதற்கான பொதுவான விருப்பத்துடன், தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா மற்றும் தாய்லாந்து  தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை நான் பெறுவேன்.

தாய்லாந்தில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6-ம்  தேதி வரை இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறேன். கடந்த டிசம்பரில் அதிபர் திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட மிகவும் வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்து இப்பயணம் அமைகிறது. “பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான கூட்டாண்மைகளை வளர்த்தல்” என்ற கூட்டு தொலைநோக்குப் பார்வையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், நமது பகிரப்பட்ட நோக்கங்களை அடைவதற்கு கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவதற்கும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்தப் பயணங்கள் கடந்த காலத்தின் அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்டு, நமது மக்கள் மற்றும் பரந்த பிராந்தியத்தின் நலனுக்காக நமது நெருங்கிய நட்புறவுகளை வலுப்படுத்த பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்.

***

(Release ID: 2118089)
TS/IR/RR/SG