Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தாய்லாந்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் போதை மருந்து மற்றும் உள நிலைமாற்று மருந்து தடுப்பு சார்ந்து போடப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை தாய்லாந்திற்கும் இந்தியாவுக்கும் இடையில் போதை மருந்து மற்றும் உள நிலைமாற்று மருந்துகள், ரசாயனங்கள், போதை மருந்து பயன்பாடு தடுப்பு சார்ந்து போடப்பட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி மேலுள்ள விஷயங்களில் இருநாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பும் கிட்டும். இதன்மூலம் அமைப்புரீதியான தகவல் தொடர்புகள் இந்தியாவுக்கும் தாய்லாந்திற்கும் இடையில் நிலவும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தபின்னர் சர்வதேச அளவில் நடைபெறும் போதைமருந்து கடத்தலை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.