Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தவாங்கில் அமைந்துள்ள 5.99 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள ஆயுதம் தாங்கிய எல்லைக் காவல்படையின் நிலத்தை அருணாச்சலப் பிரதேச அரசிற்கு மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


தவாங்கில் ஆயுதம் தாங்கிய எல்லைப்பாதுகாப்புப் படைக்கு சொந்தமான பெரு விழா மற்றும் பன்னோக்கு மைதானம் அமைக்க  அருணாச்சலப் பிரதேச அரசிற்கு மாற்றுவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தவாங்கில் அமைந்துள்ள ஆயுதம் தாங்கிய எல்லைப் பாதுகாப்புப் படை  வளாகத்தில் உள்ள 5.99 ஏக்கர் நிலப்பரப்பை பெரு விழா மற்றும் பன்னோக்கு மைதானம் அமைப்பதற்கு சரியான இடம் என்று அருணாச்சலப் பிரதேச அரசு கண்டெடுத்துள்ளது. இதில் 4.73. ஏக்கரில் பார்க்கிங் வசதியும் 1.26 ஏக்கரில் வட்ட சாலையும் அமைக்க  திட்டமிடப்பட்டு உள்ளது.  அதனால், 5.99 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு மாற்றித் தருமாறு அருணாச்சலப் பிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தய அரசு (மத்திய வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டு துறை அமைச்சகம்) “அருணாச்சலப் பிரதேசம், தவாங்கில் பார்க்கிங் வசதிகள் மற்றும் அணுகுச் சாலை கொண்ட பெரு-விழா மற்றும் பன்னோக்கு மைதானம் அமைத்தல்” என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு சுற்றுலா விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த இந்த பன்னோக்கு மைதானம் உதவும்.