Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தலைமைப் பண்பு முக்கியம்: எகோசாக் சேம்பரின் “தற்கால உலகில் மகாத்மா காந்தியின் முக்கியத்துவம்”


 

அமைதி மற்றும் அகிம்சையின் உலக அளவிலான அடையாளமாக இருக்கும் – மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில், 74வது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தை ஒட்டி ஐ.நா. தலைமையகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு எகோசாக் அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலை தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

PM India

நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச் செயலாளர் மேதகு திரு. அன்டோனியோ குட்டரெஸ், கொரிய குடியரசின் அதிபர் மேதகு திரு. மூன் ஜே-இன், சிங்கப்பூர் பிரதமர் மேதகு திரு. லீ ஹிசியென் லூங், வங்கதேச மக்கள் குடியரசின் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜமைக்கா பிரதமர் மேதகு திரு. ஆண்ட்ரூ ஹோல்னெஸ், நியூசிலாந்து பிரதமர் மேதகு ஜெசிந்தா ஆர்டெர்ன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பூடான் பிரதமர் மேதகு திரு. லொட்டே டிஷெரிங், கொரிய குடியரசின் அதிபரின் மனைவி மேதகு கிம் ஜுங்-சூக், ஐ.நா.வின் மூத்த அதிகாரிகள் மற்றும் உறுப்பு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 PM India

வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் வரவேற்புரை ஆற்றினார். ஐ.நா. தலைமையகத்தில் காந்தி சூரியசக்தி மின் உற்பத்திப் பூங்காவை, (ஐ.நா.வுக்கு இந்தியாவின் பங்களிப்பாக அளிக்கப்பட்ட வசதியை) நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் தொடங்கி வைத்தனர். ஓல்டு வெஸ்ட்பரியில் உள்ள நியூயார்க் கல்லூரி மாகாண பல்கலைக்கழகத்தில் காந்தி அமைதிப் பூங்காவில் இது அமைந்துள்ளது. அத்துடன் ஐ.நா. அஞ்சல் நிர்வாகத்தால் வெளியிடப்படும் Gandhi@150 என்ற நினைவு அஞ்சல் தலையையும் அவர்கள் வெளியிட்டனர்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது சிறப்புரையில், 20வது நூற்றாண்டில் மக்களின் சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தி ஆற்றிய பங்களிப்புகள்;  அனைவருக்கும் நன்மை கிடைத்தல் (சர்வோதயா); நலிவடைந்த மக்கள் முன்னேற்றத்துக்கான முயற்சிகள் (அந்தியோதயா); மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழுமையான அக்கறை ஆகியவை பற்றிக் குறிப்பிட்டார். கூட்டு விருப்பம் இலக்கை நோக்கிய, கூட்டு முயற்சி, நன்னெறி தேவை, மக்கள் இயக்கங்கள் மற்றும் தனிப்பட்ட பொறுப்புணர்வு ஆகியவற்றில் மகாத்மா காந்திக்கு இருந்த நம்பிக்கைகள் இன்றைய காலக்கட்டத்துக்கு மிகவும் முக்கியமானவையாக உள்ளன என்று பிரதமர் கூறினார்.

PM India

வன்முறைப் போராட்டங்கள், பயங்கரவாதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமூக-பொருளாதார பின்னடைவுகள், தொற்றுநோய்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பால் உயிர்வாழ்வதற்கு ஆபத்து சூழ்நிலைகள் ஏற்படுதல் ஆகியவை மக்களுக்கும், அரசுகள் மற்றும் சமூகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று பிரதமர் கூறினார். இவற்றில் ஏதாவது ஒரு பிரச்சினைக்கோ அல்லது அனைத்து பிரச்சினைகளுக்குமோ தீர்வு காண்பதற்கு நல்ல தலைமை கிடைக்க வேண்டியது முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். அறிவார்ந்த தலைமை எது என்பதற்கு காந்தி உருவாக்கியுள்ள நன்னெறிகள் தான் அடையாளக் குறியீடாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தக் கொள்கை மற்றும் எந்தச் செயல்பாட்டையும் – அது நாம் சந்திக்கும் மக்களின் வாழ்வை, கண்ணியத்தை, விதியை மாற்றி முன்னேற்றுவதற்கு உகந்ததாக இருக்குமா என்பதை தீர்மானிப்பதற்கான வரையறையை காந்தி நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார் என்று பொதுச் செயலாளர் குட்டரெஸ் கூறினார்.  சுகாதார வசதி, பேறுகால ஆரோக்கியம், தொடக்கக் கல்வி, பாலின சமன்பாடு, மகளிருக்கு அதிகாரம் அளித்தல், பட்டினியைக் குறைத்தல், முன்னேற்றத்தில் பங்கேற்பை உறுதி செய்தல் ஆகியவை காந்தியின் வாழ்வின் அடிப்படையான அம்சங்களாக இருந்தன. எம்.டி.ஜி.கள் மற்றும் எஸ்.டி.ஜி.கள் உருவாக்கப் பட்டதற்கு நீண்டகாலம் முன்பாகவே அவற்றை செயல்படுத்திக் காட்டியவர் காந்தி என அவர் குறிப்பிட்டார்.  உண்மையில், நீடித்த மேம்பாட்டு இலக்குகள் என்பது, காந்தியின் தத்துவங்களை செயல்படுத்துவதாகத் தான் இருக்கும் என்றார் அவர்.

காந்திய சிந்தனைகளைப் பாராட்டுவதற்கான தருணமாக இந்த நிகழ்ச்சியை, இதில் பங்கேற்ற தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் பொருந்துவதாக மகாத்மா காந்தியின் செயல்பாடுகள் இருக்கும் என அவர்கள் குறிப்பிட்டனர். மகாத்மா காந்தி என்ற பெயர் இன வரம்புகளை, மதம் மற்றும் தேசங்களை கடந்து நிற்கிறது என்றும், 21 ஆம் நூற்றாண்டுக்கான இறைதூதரின் குரலாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தனர். காந்தி பன்முக ஆளுமை கொண்டவராக இருந்தார். அவர் தேசியவாதியாகவும் சர்வதேசியவாதியாகவும் இருந்தார், மரபுகளை பின்பற்றுபவராகவும் சீர்திருத்தவாதியாகவும் இருந்தார், அரசியல் தலைவராகவும், ஆன்மிக குருவாகவும் இருந்தார், எழுத்தாளராகவும் சிந்தனையாளராகவும் இருந்தார், சமூக சீர்திருத்தம் மற்றும் மாற்றத்துக்கான இயக்கவாதியாகவும், அமைதிப் படுத்துபவராகவும் இருந்தார். வன்முறை அல்லாத மற்றும் மானிடமே மேன்மையானது என்ற அவருடைய கொள்கைக்காக மட்டும் மகாத்மாவை உலகத் தலைவர்கள் போற்றவில்லை. பொது வாழ்வில் ஆண்களையும், பெண்களையும் நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான அளவுகோலை உருவாக்கியவராக மதிக்கப்படுகிறார். அரசியல் சிந்தனைகள் மற்றும் அரசின் கொள்கைகளுக்காகவும், உலகில் அனைத்து நாடுகளின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களுக்கான சிந்தனைகளை உருவாக்கியவர் என்பதற்காகவும் போற்றுகிறார்கள்.

******