Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பலை ஆராய, பழமையான ஒயிட் ரானைக் கண்டறியுமாறு  பிரதமர் வலியுறுத்தல்


மார்ச் 2025 வரை நடைபெறும் ரான் உற்சவத்துக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் அழைத்துள்ளார். இந்த விழா மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

கட்ச் உங்கள் அனைவருக்காகவும்  காத்திருக்கிறது!

தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின்  அழகிய ஒயிட் ரானின் ( உப்பு சதுப்பு நிலம்) , கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றைக் கண்டறிய வாருங்கள்.

மார்ச் 2025 வரை நடைபெறும் இந்தத் திருவிழா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’.

*****

PKV/KV