பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களை மூடுவது / பங்குகளை விற்பது வரை மருந்துகள் கொள்முதல் கொள்கையை நீடிக்க / புதுப்பிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமான தாக்கம் :
இந்தக் கொள்கையை நீடிப்பது / புதுப்பிப்பது மத்திய பொதுத்துறை மருந்து நிறுவனங்களில் தற்போதுள்ள வசதிகளை அதிகபட்சம் பயன்படுத்துவதற்கும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வருவாயை ஈட்டுவதற்கும் விலை உயர்ந்த, நவீன எந்திரங்களை இயங்கும் நிலையில் வைத்திருக்கவும் உதவும். எந்திரங்களை இவ்வாறு பராமரிப்பது பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடும்போது அல்லது அவற்றின் பங்குகளை விற்கும்போது அதிக வருவாய் கிடைக்க உதவும்.
பின்னணி :
பொதுத்துறையில் உள்ள ஐடிபிஎல்,
ஆர்டிபில் ஆகியவற்றை மூடவும் எச்ஏஎல், பிசிடிஎல் ஆகியவற்றின் பங்குகளை விற்கவும் 28.12.2016 அன்று மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. பின்னர், 17.07.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு திருத்தப்பட்டது. இதன்படி, 14.06.2018 தேதியிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி உபரியாக உள்ள நிலத்தை விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடும் வரை / பங்குகள் விற்பனை வரை கொள்முதல் கொள்கையை நீடிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.