இந்தியன் ஆயில் நிறுவனம் லிமிடெட் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவிஜிஎஸ் 10எல்எல்-ன் முதல் தொகுதியை பப்புவா நியூ கினியாவுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்ததன் மூலம் நாட்டை தற்சார்புடையதாக்கும் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது நமது தற்சார்பு இந்தியா முயற்சிகளுக்கு வலு சேர்க்கிறது.”
***
AP/PLM/RS/GK
Glad to see this. It adds strength to our Aatmanirbhar Bharat efforts. https://t.co/P5ttymSRxA
— Narendra Modi (@narendramodi) January 31, 2023