Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தர்மஸ்தலத்தில் ஸ்ரீமஞ்சுநாத சுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார் பிரதமர்; உஜிரே-வில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்

தர்மஸ்தலத்தில் ஸ்ரீமஞ்சுநாத சுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார் பிரதமர்; உஜிரே-வில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, தனது கர்நாடக மாநிலப் பயணத்தின் முதல் கட்டமாக மங்களூருக்கு இன்று வந்து சேர்ந்தார். அங்கிருந்து தர்மஸ்தலத்துக்கு சென்று, ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்.

உஜிரே பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பிரதமரின் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே அட்டைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கினார். “பூமி தாயை பாதுகாப்போம் மற்றும் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வோம்” திட்டத்தை தொடங்கிவைத்ததன் அடையாளமாக அதற்கான சின்னத்தை (லோகோ) அவர் வெளியிட்டார்.

பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், மஞ்சுநாதரை வழிபடுவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

தற்போதைய நூற்றாண்டு, திறன் வளர்ப்பு குறித்தது என்று அவர் கூறினார். இந்தியா என்பது இளைஞர்கள் நிரம்பிய நாடு, எனவே, நமது புவியமைப்பு பகிர்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.

நமது முனிவர்களும், தீர்க்கதரிசிகளும் கட்டமைப்பை உருவாக்கி ஊக்குவித்து வந்தனர். இது நூற்றாண்டுகளுக்கும் சமூகத்துக்கு உதவியது என்று பிரதமர் தெரிவித்தார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபே அட்டைகளை வழங்குவதற்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பேசிய பிரதமர், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீது உள்ள ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

பீம் செயலியைப் பயன்படுத்துமாறும், ரொக்கமற்ற பரிவர்த்தனைகளை பின்பற்றுமாறும் மக்களை அவர் கேட்டுக் கொண்டார். இது நேர்மை மற்றும் நாணயத்துக்கான காலகட்டம்; அரசு அமைப்பை ஏமாற்றுவோருக்கு இடம் இல்லை என்று பிரதமர் கூறினார்.

இந்திய அரசிடமிருந்து வரும் ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு வளமும் இந்தியர்களின் நலனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார். வளர்ச்சியின் பலன்கள், உரிய பயனாளிகளுக்கு எந்தவொரு ஊழலுக்கும் இடம் அளிக்காமல் சென்று சேர்வதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று பிரதமர் கூறினார்.

தற்போதைய நாள் மற்றும் காலக்கட்டத்தில், நீரை சேமிப்பது என்பது மிகப்பெரும் சவால் என்று திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார். குறுகியகால ஆதாயம் குறித்து கவலைப்படாமல், இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். சொட்டுநீர்ப் பாசனம் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கர்நாடக விவசாயிகளை கேட்டுக் கொண்ட பிரதமர், இது நீரை சேமிக்க உதவும் என்று கூறினார்.

***