சுப்ரமணிய பாரதியின் தமிழ் தேசபக்திப் பாடலை அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரிகள் பாடுவதைப் பார்த்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்.”
***************
(Release ID: 1843036)
I am delighted and proud to see this. Kudos to these shining stars of our Yuva Shakti from Arunachal Pradesh for furthering the spirit of 'Ek Bharat, Shreshtha Bharat’ by singing in Tamil. https://t.co/XtRSoZf2fG
— Narendra Modi (@narendramodi) July 20, 2022