தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டிருப்பதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் குன்னூரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமு‘ம், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000மும் கருணைத் தொகையாக வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”
***
ANU/AP/RB/DL
Pained by the loss of lives due to a bus accident near Coonoor in Nilgiris district, Tamil Nadu. My thoughts are with the bereaved families. I pray that the injured recover soon. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. Those…
— PMO India (@PMOIndia) October 1, 2023