Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் பிரதமரின் உரை


பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழாவில் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்பட்டமளிப்பு விழாவில் 21000க்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றனர்இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுனர் திரு பன்வாரிலால் புரோகித்தும் கலந்து கொண்டார்.

மாணவர்களிடையே உரையாற்றிய போது பிரதம மந்திரி பட்டயம் மற்றும் பட்டம் வாங்கியவர்களில் 70%க்கும் அதிகமானோர் பெண்களாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்பட்டதாரிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் பெண் பட்டதாரிகளுக்கு சிறப்பான பாராட்டுகளையும் தெரிவித்தார்எந்தவொரு துறையிலும் பெண்கள் முன்னணியில் நின்று வழி நடத்துவது என்பது எப்போதும் சிறப்பானதுதான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாணவர்கள் மற்றும் கல்வி நிலையத்தின் வெற்றி என்பது மாபெரும் மனிதரான எம்.ஜி.ஆருக்கு பெரிதும் மகிழ்ச்சியைத் தரும்எம்.ஜி.ஆரின் அரசாட்சி என்பது ஏழைகளின் மீது கருணை நிரம்பிய ஆட்சியாக இருந்தது என்று திரு மோடி நினைவு கூர்ந்தார்சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியன எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவையாக இருந்தனஎம்.ஜி.ஆர் பிறந்த இலங்கையில் உள்ள நமது தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் சுகாதார மேம்பாட்டுக்கு உதவி புரிவதில் இந்தியா பெருமை கொள்கின்றது. இந்தியா நிதி உதவி செய்த ஆம்புலன்ஸ் சேவையை இலங்கையின் தமிழ் சமுதாயம் பரவலாக பயன்படுத்தி வருகிறதுசுகாதாரச் சேவையில் இத்தகைய முயற்சிகள் அதிலும் குறிப்பாக தமிழ் சமுதாயத்தினருக்கான உதவிகள் எம்.ஜி.ஆருக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கும்

இந்திய மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருந்தியல் நிபுணர்கள் ஆகியோருக்கு மிகப் பெரும் பாராட்டும் மரியாதையும் உள்ளதாக பிரதம மந்திரி குறிப்பிட்டார்உலகிற்காக இந்தியா மருந்துகளையும், தடுப்பூசிகளையும் தயாரித்து வருகிறதுகோவிட்19 காலகட்டத்தில் உலக நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலான இறப்பு விகிதமே இருந்தது. அதே போன்று அதிகபட்ச அளவில் குணம் அடைதல் விகிதமும் இருந்ததுஇந்தியாவின் சுகாதாரம் சார்ந்த சூழல் அமைப்பு இப்போது புதிய கண்களால் புதிய மரியாதையுடனும் புதிய நம்பகத்தன்மையுடனும் பார்க்கப்படுகிறதுஇந்த கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடமானது காசநோய் போன்ற பிற நோய்களுக்கு எதிராக போராடுவதற்கும் உதவியாக இருக்கும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்

ஒட்டுமொத்த மருத்துவ கல்வி மற்றும் சுகாதாரத் துறையை அரசு உருமாற்றம் செய்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்தேசிய மருத்துவ ஆணையமானது புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான விதிகளை சீரமைப்பதோடுஅதிக அளவிலான வெளிப்படைத் தன்மையையும் கொண்டு செயல்படும்மேலும் சுகாதாரத் துறையில் மனிதவள ஆற்றல் தரமாக கிடைப்பதையும் இந்த ஆணையம் உறுதிபடுத்தும்கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்கள் 30,000க்கும் மேல் அதிகரிக்கப்பட்டு உள்ளனஇது 2014ல் இருந்து கணக்கிடும் போது 50%க்கும் அதிகமாக உள்ளதுஅதே போன்று முதுநிலை படிப்புக்கான இடங்கள் 24,000 அதிகரிக்கப்பட்டு உள்ளன2014ல் இருந்து கணக்கிடும் போது இது சுமார் 80% அதிகம் ஆகும்2014ல் நாட்டில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தனஆனால் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதிலும் 15க்கும் அதிகமான எய்ம்ஸ் மருந்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்து உள்ளதாக பிரதம மந்திரி குறிப்பிட்டார்இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய அரசு ரூ.2000 கோடிக்கு மேல் வழங்கும்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஆத்ம நிர்பார் ஸ்வச் பாரத் திட்டமானது புதிய மற்றும் உருவாகி வரும் நோய்களை கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலை மருத்துவமனைகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரும் என்று பிரதமர் எடுத்துரைத்தார்.

நாட்டில் மருத்துவர்கள் மிகவும் மதிக்கப்படக் கூடிய தொழில் நிபுணர்களாக உள்ளனர். இந்த மதிப்பானது பெருந்தொற்றுக்குப் பிறகு கூடுதலாக உயர்ந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்இந்த மதிப்பானது உங்கள் தொழிலின் ஆபத்தை மக்கள் உணர்ந்ததால் உருவாகி உள்ளதுநுட்பமாகப் பார்த்தால் சில மருத்துவர்களுக்கு வாழ்வா சாவா என்ற நிலை உள்ளதுகடுமையாக இருப்பதும் கடுமையாக இருப்பது போல் தோன்றுவதும் வெவ்வேறான விஷயங்கள் ஆகும் என்று குறிப்பிட்ட பிரதமர்மாணவர்களின் நகைச்சுவை உணர்வு பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்இது அவர்களுடைய நோயாளிகளை உற்சாகப்படுத்த உதவுவதோடு அவர்களின் மன உறுதியையும் வலுப்படுத்தும் என்றார். தேசத்தின் ஆரோக்கியத்தை பாரம்பரிப்பவர்களாக இருப்பதினால் மாணவர்கள் தங்களின் உடல்நலனிலும், உடற்தகுதியிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்சுய விருப்பம் என்ற நிலையைத் தாண்டி உயர வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்ட பிரதமர் அவ்வாறு செய்யும் போது அவர்கள் பயமற்றவர்களாக செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

*****************