Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிச்சாங் புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிச்சாங் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தப் புயலில் காயமடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்த திரு மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் அயராது பணியாற்றி வருவதாகவும், நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை தங்கள் பணிகளைத் தொடர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

“தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிச்சாங் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்தப் புயலால் காயமடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனைகள் செய்கிறேன்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் அயராது பணியாற்றி வருகின்றனர், நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்குத்  திரும்பும் வரை அவர்கள் தங்கள் பணிகளைத் தொடர்வார்கள்.”

****

ANU/SMB/BS/KV