மகத்தான கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் இன்று வெளியிட்டார். மாபெரும் தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய திரு மோடி, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கும், இந்திய சுதந்திரப் போராட்ட நினைவுகளுக்கும், தமிழ்நாட்டின் பெருமைக்கும் இன்று ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் படைப்புகளின் சிறப்பான வெளியீட்டு விழா இன்று நிறைவடைந்தது என்றும் அவர் கூறினார்.
‘கால வரிசையில் பாரதியார் படைப்புகள்‘ என்ற நூலை 21 தொகுதிகளாக தொகுத்து வழங்கிய அசாதாரணமான, முன்னெப்போதும் இல்லாத மற்றும் அயராத பணிகளை பிரதமர் பாராட்டினார். சீனி விஸ்வநாதனின் கடின உழைப்பு அத்தகைய தவம் என்றும், இது வரும் பல தலைமுறைகளுக்கும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார். திரு விஸ்வநாதனின் தவம், தர்ம சாஸ்திரத்தின் வரலாற்றை எழுதுவதில் தமது வாழ்க்கையின் 35 ஆண்டுகளைச் செலவிட்ட மகா-மகோபாத்யாய பாண்டுரங் வாமன் கானே என்பவரை நினைவுபடுத்துவதாக திரு மோடி குறிப்பிட்டார். திரு. சீனி விஸ்வநாதனின் பணிகள் கல்வி உலகில் ஒரு அடையாளமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், அவரது மகத்தான பணிகளுக்காக அவரையும் அவரது சகாக்களையும் பாராட்டினார்.
‘கால வரிசையில் பாரதி படைப்புகள்‘ பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்த நூல் பாரதியின் படைப்புகளை மட்டும் கொண்டிருக்கவில்லை, அவரது இலக்கியம் அல்லது இலக்கியப் பயணம் குறித்த உள்ளார்ந்த பின்னணித் தகவல்களையும், அவரது படைப்புகள் குறித்த ஆழமான தத்துவ பகுப்பாய்வையும் கொண்டுள்ளது என்று கூறினார். ஒவ்வொரு தொகுதியிலும் வர்ணனைகள், விளக்கங்கள் மற்றும் விரிவான சிறுகுறிப்புகள் உள்ளன. “இந்தப் பதிப்பு ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு பாரதியின் சிந்தனைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்வதற்கு பெரும் உதவியாக இருக்கும், அதே நேரத்தில் அவர் வாழ்ந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கும்” என்று திரு மோடி கூறினார்.
கீதா ஜெயந்தியை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், கீதையின் போதனைகள் மீது திரு. சுப்பிரமணிய பாரதி கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கைக்காகவும், அதன் ஞானத்தின் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த புரிதலுக்காகவும் அவரைப் பாராட்டினார். “அவர் கீதையை தமிழில் மொழிபெயர்த்தார், அதன் ஆழமான செய்திக்கு எளிமையான மற்றும் புரிந்து கொள்ளகக்கூடிய விளக்கத்தை வழங்கினார்” என்று கூறிய திரு மோடி, கீதா ஜெயந்தி, சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாள் மற்றும் அவரது படைப்புகள் வெளியிடப்பட்டது ஆகியவை ‘திரிவேணி‘ போன்ற ஒரு குறிப்பிடத்தக்க சங்கமத்திற்கு சற்றும் குறைவானது அல்ல என்று கூறினார்.
இந்திய தத்துவத்திலிருந்து ‘சப்த பிரம்மா‘ என்ற கருத்தைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியா எப்போதும் வார்த்தைகளை ஒரு வெளிப்பாட்டு ஊடகமாக மட்டுமே கருதிவிடவில்லை என்றும், அவற்றின் எல்லையற்ற சக்தியை எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறினார். “முனிவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் வார்த்தைகள் அவர்களின் சிந்தனைகள், அனுபவங்கள் மற்றும் ஆன்மீக நடைமுறைகளின் சாரத்தை பிரதிபலிக்கின்றன. எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.” குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தொகுக்கும் இந்தப் பாரம்பரியம் இன்றைக்கும் பொருத்தமானதாக உள்ளது என்று திரு மோடி கூறினார். உதாரணமாக, புராணங்களில் முறையாக பாதுகாக்கப்பட்ட மகரிஷி வியாசரின் எழுத்துக்கள் இன்னும் எதிரொலிக்கின்றன. சில உதாரணங்களைக் குறிப்பிட்ட பிரதமர், சுவாமி விவேகானந்தரின் முழுமையான படைப்புகள், டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் உரைகள், தீன் தயாள் உபாத்யாயாவின் முழுமையான படைப்புகள் ஆகியவை சமுதாயத்திற்கும், கல்விக்கும் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளன என்றார். திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்க்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், இது அதன் இலக்கிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் என்றும், பப்புவா நியூ கினியா பயணத்தின் போது டோக் பிசினில் திருக்குறளை வெளியிடவும், அதன் குஜராத்தி மொழிபெயர்ப்பை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வெளியிடவும் தமக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் திரு மோடி கூறினார்.
நாட்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பணியாற்றிய சிறந்த சிந்தனையாளர் சுப்பிரமணிய பாரதியை பாராட்டிய திரு மோடி, அந்த நேரத்தில் நாட்டிற்கு தேவையான ஒவ்வொரு திசையிலும் அவர் பணியாற்றினார் என்றார். பாரதியார் தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் பாரம்பரியம் மட்டுமல்ல, இந்தியாவின் எழுச்சி மற்றும் பெருமையை கனவு கண்ட பாரதி பாரத அன்னையின் சேவைக்காக தனது ஒவ்வொரு மூச்சையும் அர்ப்பணித்த ஒரு சிந்தனையாளர் என்றும் அவர் கூறினார். பாரதியாரின் பங்களிப்பை மக்களுக்கு பரப்பும் கடமை உணர்வுடன் அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். 2020-ம் ஆண்டில், கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதுமே பாதிக்கப்பட்ட போதிலும், சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு தினத்தை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதை அரசு உறுதி செய்தது என்று அவர் கூறினார். சர்வதேச பாரதி விழாவில் தாமும் பங்கேற்றதாக அவர் மேலும் கூறினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மகாகவி பாரதியின் சிந்தனைகள் மூலம் இந்தியாவின் பார்வையை உலகிற்கு தொடர்ந்து முன்வைத்து வருவதாக திரு மோடி வலியுறுத்தினார். தமக்கும் சுப்பிரமணிய பாரதிக்கும் இடையே உயிருள்ள மற்றும் ஆன்மீக பிணைப்பாக காசி திகழ்கிறது எனக் கோடிட்டுக் காட்டிய பிரதமர், செலவிடப்பட்ட நேரமும், சுப்பிரமணிய பாரதியுடனான உறவும் காசியின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்று குறிப்பிட்டார். ஞானம் பெறுவதற்காக பாரதியார் காசிக்கு வந்ததாகவும், அங்கேயே தங்கியிருந்ததாகவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் இன்னும் காசியில் வசித்து வருவதாகவும் அவர் கூறினார். காசியில் வசித்தபோது பாரதியார் தமது அற்புதமான மீசையை அழகுபடுத்த உத்வேகம் பெற்றார் என்று நினைவு கூர்ந்த திரு மோடி, காசியில் வசித்தபோது பாரதியார் தமது பல படைப்புகளை எழுதினார் என்றும் குறிப்பிட்டார். வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பங்கேற்ற பிரதமர், இந்தப் புனிதமான பணியை வரவேற்றதுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பங்களிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட இருக்கை நிறுவப்பட்டிருப்பது அரசின் நல்வாய்ப்பாகும் என்று கூறினார்.
புகழ்பெற்ற கவிஞரும், தொலைநோக்குப் பார்வை கொண்டவருமான திரு. சுப்பிரமணிய பாரதிக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், இந்தியாவின் கலாச்சார, அறிவுசார் மற்றும் சமூக கட்டமைப்புக்கு அவரது இணையற்ற பங்களிப்பை எடுத்துரைத்தார். “சுப்பிரமணிய பாரதி பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகை அலங்கரிக்கும் ஒரு ஆளுமையாவார். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த போதிலும், அவர் நம் தேசத்தில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். தமது சக்திவாய்ந்த வார்த்தைகள் மூலம் அவர் சுதந்திரத்தைக் கற்பனை செய்தது மட்டுமல்லாமல், மக்களின் கூட்டு உணர்வையும் தட்டியெழுப்பினார் என்று கூறிய திரு மோடி, இது அவர் எழுதிய ஒரு ஈரடியில் ஆழமாகப் பிரதிபலிக்கிறது, அது இன்றுவரை நம்மிடையே எதிரொலிக்கிறது: “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?”, அதாவது இந்த சுதந்திர தாகம் எப்போது தணியும்? அடிமைத்தனத்தின் மீதான மோகம் எப்போது முடிவுக்கு வரும்? இதழியல் மற்றும் இலக்கியத்திற்கு பாரதியின் பங்களிப்புகளைப் பாராட்டிய திரு மோடி, “பாரதியார் 1906 ஆம் ஆண்டில், இந்தியா வீக்லி இதழைத் தொடங்கியதன் மூலம் பத்திரிகைத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார், அரசியல் கார்ட்டூன்களை வெளியிட்ட முதல் தமிழ் செய்தித்தாள் இதுவாகும். கண்ணன் பாட்டு போன்ற அவரது கவிதைகள் அவரது ஆழ்ந்த ஆன்மீகத்தையும் விளிம்புநிலை மக்கள் மீதான ஆழ்ந்த பச்சாதாபத்தையும் பிரதிபலிக்கின்றன. ஏழைகளுக்கு ஆடைகளை நன்கொடையாகத் தாருங்கள் என்ற அவரது வேண்டுகோள் அவரது பணி எவ்வாறு செயல் மற்றும் பரோபகாரத்தை ஊக்குவித்தது என்பதை நிரூபிக்கிறது. உத்வேகத்தின் நித்திய ஆதாரமாக அவரை அழைத்த திரு மோடி, அவரது அச்சமற்ற தெளிவையும், சிறந்த எதிர்காலத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையையும் பாராட்டினார், இது சுதந்திரம், சமத்துவம் மற்றும் இரக்கத்திற்காக பாடுபட மக்களை எப்போதும் வலியுறுத்துகிறது என்றார்.
திரு. பாரதியார் தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர் என்று பாராட்டிய பிரதமர், சமூகம் மற்ற இன்னல்களில் சிக்கித் தவித்த காலங்களில் கூட, பாரதியார் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் உறுதியான ஆதரவாளராக இருந்தார் என்றும், அறிவியல் மற்றும் புதுமைகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார் என்றும் குறிப்பிட்டார். தூரத்தைக் குறைத்து நாடு முழுவதையும் இணைக்கும் ஒரு தகவல் தொடர்பை பாரதியார் எதிர்பார்த்தார் என்று அவர் மேலும் கூறினார். சுப்பிரமணிய பாரதியின் வரிகள், ‘காசி நகர் புலவர் பேசும் உரைதான், காஞ்சியில், கேட்பதற்கோர் கருவி செய்வோம்‘; அதாவது, காஞ்சியில் அமர்ந்து கொண்டு பனாரஸ் துறவிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க ஒரு உபாயம் இருக்க வேண்டும். இந்தியாவை தெற்கிலிருந்து வடக்கிற்கும், கிழக்கிலிருந்து மேற்கிற்கும் இணைப்பதன் மூலம் டிஜிட்டல் இந்தியா இந்தக் கனவுகளை நனவாக்குகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார். பாஷினி போன்ற செயலிகள் மொழி தொடர்பான அனைத்து சிக்கல்களையும் தீர்த்துள்ளன என்று அவர் கூறினார். இந்தியாவின் ஒவ்வொரு மொழியையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்தியாவின் ஒவ்வொரு மொழி மீதும் மரியாதையும் பெருமிதமும் உள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, இது ஒவ்வொரு மொழிக்கும் சேவை செய்வதற்கு வழிவகுக்கிறது என்றார்.
பாரதியின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், அவரது படைப்பு பண்டைய தமிழ் மொழிக்கு விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்று குறிப்பிட்டார். “உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு சுப்பிரமணிய பாரதியின் இலக்கியங்கள் ஒரு பொக்கிஷம். அவரது இலக்கியங்களைப் பரப்பும் போது நாமும் தமிழ் மொழிக்குச் சேவை செய்கிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், நம் நாட்டின் பண்டைய பாரம்பரியத்தைப் பாதுகாத்து ஊக்குவிக்கிறோம்,” என்று அவர் கூறினார். தமிழின் அந்தஸ்தை உயர்த்த கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை எடுத்துக் காட்டிய திரு மோடி, “கடந்த 10 ஆண்டுகளில், தமிழின் பெருமையைப் போற்றுவதற்காக நாடு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளது” என்று கூறிய திரு மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் தமிழின் பெருமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் தமக்குக் கிடைத்தது என்றும் கூறினார். உலகெங்கும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்களை திறக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் படைப்புகளின் தொகுப்பு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நாம் ஒன்றிணைந்து, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவோம், நம் நாட்டிற்கான பாரதியின் கனவுகளை நிறைவேற்றுவோம்” என்று அவர் கூறினார். படைப்புகளைத் தொகுத்து வெளியிடுவதில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டி திரு மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய இணை அமைச்சர்கள் திருராவ் இந்தர்ஜித் சிங், திரு எல் முருகன், இலக்கியவாதி திரு சீனி விஸ்வநாதன், வெளியீட்டாளர் திரு வி. சீனிவாசன் ஆகியோர் பிரமுகர்களுடன் கலந்து கொண்டனர்.
பின்னணி
சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை விதைத்தன, இந்திய கலாச்சாரம் மற்றும் நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜனங்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் வெளிப்படுத்தின. இந்த தொகுப்புகள் சீனி விஸ்வநாதனால் தொகுக்கப்பட்டு, அலையன்ஸ் பப்ளிஷர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள், தத்துவ விளக்கக்காட்சி உள்ளிட்டவை உள்ளன.
***
TS/PKV/RJ/DL
Honoured to release a compendium of Mahakavi Subramania Bharati's works. His vision for a prosperous India and the empowerment of every individual continues to inspire generations. https://t.co/3MvdIVyaG0
— Narendra Modi (@narendramodi) December 11, 2024
हमारे देश में शब्दों को केवल अभिव्यक्ति ही नहीं माना गया है।
— PMO India (@PMOIndia) December 11, 2024
हम उस संस्कृति का हिस्सा हैं, जो ‘शब्द ब्रह्म’ की बात करती है, शब्द के असीम सामर्थ्य की बात करती है: PM @narendramodi pic.twitter.com/A8MBA5Zchn
Subramania Bharati Ji was a profound thinker dedicated to serving Maa Bharati. pic.twitter.com/T22Un1pSK1
— PMO India (@PMOIndia) December 11, 2024
Subramania Bharati Ji's thoughts and intellectual brilliance continue to inspire us even today. pic.twitter.com/uUmUufXRJu
— PMO India (@PMOIndia) December 11, 2024
The literary works of Mahakavi Bharati Ji are a treasure of the Tamil language. pic.twitter.com/CojAV8jlja
— PMO India (@PMOIndia) December 11, 2024