Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தமிழக முதல்வர் பிரதமருடன் சந்திப்பு

தமிழக முதல்வர் பிரதமருடன் சந்திப்பு


தமிழக முதல் அமைச்சர் திரு. ஓ .பன்னீர்செல்வம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

உச்ச நீதி மன்றம் ஜல்லிக்கட்டு மீது பிறப்பித்துள்ள தடையை தொடர்ந்து ஏற்பட்டு வரும் போராட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. ஜல்லிக்கட்டின் கலாச்சார முக்கியத்துவத்தை பாராட்டிய பிரதமர், இந்த விஷயம் நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது என்பதை விளக்கினார்.

மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

தமிழகத்தில் நிலவும் வறட்சி நிலவரம் குறித்தும் அனைத்து விதமான உதவியும் வழங்கப்படும் என்று முதல் அமைச்சருக்கு உறுதி அளித்த பிரதமர், மாநிலத்திற்கான மத்தியக் குழு நியமிக்கப்படும் என்று கூறினார்.

B