Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தடையின்றி கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உருவாக்குதல்’ குறித்த மாநாட்டில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார்


புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் தடையின்றி கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உருவாக்குதல்‘  குறித்த மாநாட்டின் நிறைவு அமர்வில் 2021 நவம்பர் 18 அன்று நண்பகல் 12.00 மணிக்குப்‌ பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.

 

2021, நவம்பர் 17 -18ல் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழில் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள்.

 

இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சரும் பங்கேற்பார்.

****