15.03.2017 அன்று நடைபெற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, தேசிய சுகாதாரக் கொள்கை, 2017-க்கு (என்.எச்.பி.2017) ஒப்புதல் அளித்தது. இக்கொள்கை, விரிவான ஒருங்கிணைந்த வழியின் மூலம் அனைவரும் ஆரோக்கியத்தை நோக்கி சென்றடைய செய்யும். இது உலகளாவிய சுகாதார பாதுகாப்பை எய்துவதையும், அனைவருக்கும் குறைந்த விலையில் தரமான சுகாதார கவனிப்பு சேவைகள் கிடைக்க செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
இக்கொள்கை தனியார் பிரிவுகளை முக்கிய பங்குதாரர்களாக கொண்டு முழுமையான பிரச்சினைகளையும், தீர்வுகளையும் காணும். இது தரமான கவனிப்பை ஊக்குவிப்பதுடன், புதிதாக உருவாகும் நோய்கள் மீதும், மற்றும் ஊக்குவிப்பு மற்றும் தடுப்பு சுகாதார கவனிப்பில் முதலீட்டின் மீதும் கவனம் செலுத்தும். இக்கொள்கை, நோயாளிகளை மையமாக கொண்டு, தரமான கவனிப்பை உறுதிசெய்யும். இது, சுகாதார பாதுகாப்பு மற்றும் இந்தியாவில் உருவாக்குவோம் திட்டத்தின் கீழான மருந்துகள் மற்றும் கருவிகளுக்கு தீர்வாக அமையும்.
அனைத்து வளர்ச்சி கொள்கைகளிலும், தடுப்பு மற்றும் சுகாதார கவனிப்பு இடம்பெற செய்வதன் மூலம் உயர் அளவிலான நல்ல சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை எய்துவதும் மற்றும் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளாது அனைவருக்கும் தரமான சுகாதார கவனிப்பு சேவைகள் கிடைக்கச் செய்வதை எய்துவதும் தேசிய சுகாதார கொள்கை, 2017-ன் முக்கிய நோக்கமாகும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் கவனிப்பு நிலைகளில், கிடைக்கச் செய்தல் மற்றும் நிதி பாதுகாப்பு அளிக்கும் வகையில், இக்கொள்கையின் மூலம் அனைத்து பொது மருத்துவமனைகளிலும் இலவச மருந்துகள், இலவச பரிசோதனைகள் மற்றும் இலவச அவசரகால கவனிப்பு சேவைகள் வழங்கப்படும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கவனிப்பு சேவைகளில், சுகாதார அமைப்பில் முக்கியமான வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் துணை செய்தல் போன்ற குறுகிய கால நடவடிக்கைகளுக்கு தேவையானவற்றை வாங்குவதற்கு இக்கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது.
இக்கொள்கை, அனைத்து வகையிலும் சுகாதார அமைப்புகளை வடிவமைக்கச் செய்வதில் அரசின் பங்கிற்கு முக்கியத்துவம் அளிக்க பரிந்துரைக்கிறது. இக்கொள்கையில் மூலம் எதிர்பார்க்கப்படும் பொதுச் செலவினம் மற்றும் விரிவான, ஒருங்கிணைந்த மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பொது சுகாதார கவனிப்பு அமைப்பை அளித்தல் ஆகியவற்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய சுகாதாரக் கொள்கை, 2017 தேசிய இலக்குகளை எய்துவதில் உள்ள முக்கிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு, நேர்மறை மற்றும் செயல்திறனுடன் தனியார் துறையை அணுக வலியுறுத்துகிறது. இது, முக்கிய வாங்குதல்கள், திறன்மேம்பாடு, திறன்வளர்ப்புத் திட்டங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனநல சுகாதாரச் சேவைகளை வலுவாக்குவதற்கான நிலையான இணைப்புகளை வளர்த்தல், மற்றும் பேரழிவு மேலாண்மை போன்றவற்றில் தனியார் துறை கூட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இக்கொள்கை, தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிக்கும் வண்ணம் நிதி மற்றும் சலுகைகள் அல்லாதவற்றை வலியுறுத்துகிறது.
இக்கொள்கை, குறித்த காலத்திற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% பொது சுகாதார செலவினத்திற்கென உயர்த்துவதற்கு முன்மொழிகிறது. இக்கொள்கை பெரிய அளவில், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் மூலமாக உறுதிசெய்யப்பட்ட விரிவான ஆரம்ப சுகாதார கவனிப்பு அளிக்க முக்கியத்துவம் அளிக்கிறது. இக்கொள்கை, மிக குறிப்பிட்ட என்பதிலிருந்து முதியோர் சுகாதார கவனிப்பு, வலிநிவாரண கவனிப்பு மற்றும் மறுவாழ்வு கவனிப்பு சேவைகள் போன்றவற்றை உள்ளடக்கிய விரிவான சுகாதார கவனிப்புத் திட்டம் என்ற முக்கிய மாறுதலை குறிக்கிறது. இக்கொள்கை, வளஆதாரங்களின் பெரும்பங்கை (மூன்றில் இரண்டு அல்லது அதற்கு மேல்) ஆரம்ப கவனிப்பு மையங்களுக்கும், அதைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கவனிப்பு மையங்களுக்கும் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துகிறது. தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அளிக்கப்படும் பெரும்பாலான இரண்டாம் நிலையிலான கவனிப்பை மாவட்ட அளவில் அளிக்க விரும்புகிறது.
இக்கொள்கை, நோய் தொற்றுதல் / நிகழ்வினை குறைத்தல், சுகாதார நிலை மற்றும் திட்டத்தின் தாக்கம் மற்றும் சுகாதார அமைப்பு செயல்திறன் மற்றும் அமைப்பை வலுவாக்குதல் போன்றவற்றை குறிப்பிட்ட இலக்காக கொண்டிருக்கும். இது, சுகாதாரம், கண்காணிப்பு அமைப்பை வலுவாக்கவும், 2020-க்குள் முக்கியமான பொது சுகாதார நோய்களுக்கான பதிவேடுகளை உருவாக்குவும் முற்படுகிறது. இது பொது சுகாதாரத்தை இலக்காக கொண்டு மருத்துவக் கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு பிற கொள்கைகளுடன் கூட்டு ஏற்படுத்தவும் முற்படுகிறது.
தேசிய சுகாதார கொள்கை, 2017-ன் பிரதான நோக்கங்கள், சுகாதாரம், நிறுவனம் மற்றும் சுகாதார கவனிப்பு சேவைகளில் முதலீடு, நோய்கள் தடுப்பு மற்றும் பிற பிரிவுகள் மூலமாக நல்ல சுகாதாரனை ஊக்குவித்தல்,தொழில்நுட்பத்தை அணுகுதல், மனிவள ஆதாரங்களை வளர்த்தல், மருத்துவ பன்மைத்துவத்தை ஊக்குவித்தல், சிறந்த உடல்நனுக்கு தேவைப்படும் அறிவுதளத்தை உருவாக்குதல், நிதி பாதுகாப்பு உத்திகள் மற்றும் சுகாதாரத்திற்கான வரைமுறை மற்றும் முன்னேற்றமான உறுதி – ஆகிய அனைத்து வகைகளிலும் சுகாதார அமைப்புகளை வடிவமைப்பதில் அரசின் பங்கை தெரியப்படுத்துதல், தெளிவாக்குதல், வலுவாக்குதல் மற்றும் முன்னுரிமைப்படுத்துதல் ஆகியவையாகும். இக்கொள்கை, நாடு முழுவதிலும் உள்ள பொது சுகாதார நிறுவனங்களை சீர்செய்தல் மற்றும் வலுவாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் அனைவருக்கும் இலவச மருந்துகள், பரிசோதனைகள் மற்றும் இதர முக்கிய சுகாதார சேவைகள் அளிக்கப்படும்.
இக்கொள்கையின் விரிவான கொள்கைகள், தொழில்வல்லுமை, ஒருங்கிணைப்பு மற்றும் நெறிமுறைகள், பங்குகள், அணுகுதல், பொதுவான்மை, நோயாளி முக்கியத்துவம் மற்றும் தரமான கவனிப்பு, பொறுப்புடைமை மற்றும் பன்மைத்துவம் ஆகியவற்றை மையமாக கொண்டிருக்கும்.
இது, பொது சுகாதாரத்தை இலக்காக கொண்டு, பொது மருத்துவமனைகளை குழுவாக ஏற்படுத்துதல், அரசு சார்பற்ற சுகாதார சேவை அளிப்பவர்களிடமிருந்து சுகாதார கவனிப்பிற்கு முக்கியமாக தேவைப்படும் பற்றாக்குறையானவற்றை வாங்குதல், சுகாதார கவனிப்பிற்கு சேமிப்பிலிருந்து செலவு செய்வதை வெகுவாக குறைத்தல், பொது சுகாதார அமைப்புகள் மீதான நம்பிகையை மீள கொண்டு வருதல் மற்றும் தனியார் சுகாதார தொழிற்சாலை மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள் செயல்பாடு மற்றும் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கவனிப்பு சேவைகளில், மேம்படுத்தப்பட்ட மற்றும் அனைவருக்கும் சுகாதார கவனிப்பு கிடைக்கச் செய்வதை உறுதிசெய்யவும் முற்படுகிறது.
குழந்தை மற்றும் வயதுவந்தோர் சுகாதாரத்தில், உரிய அளவை எட்டும் வகையில் நோய் தடுப்பு கவனிப்பை (நோய் ஏற்படுவதுற்கு முன்னரே என்பதை இலக்காக கொண்டு) இக்கொள்கை உறுதி செய்கிறது. இக்கொள்கை பள்ளி சுகாதாரத் திட்டங்களுக்கு முக்கிய இடத்தை அளிப்பதுடன், உடல்நலம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை பள்ளிப்படிப்பின் ஒரு பகுதியாக ஏற்படுத்தவும் முக்கியத்துவம் அளிக்கிறது.
பன்முக சுகாதார கவனிப்பு கொள்கையை தாங்கிபிடிக்கும் வகையில், இக்கொள்கை பல்வேறு சுகாதார அமைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இக்கொள்கையின் மூலம், ஆயுஷ்-ல் உள்ள திறனை முக்கியப்படுத்தும் வகையில், பொது இடங்களில் ஆயுஷ் தீர்வுகளுக்கான மையங்கள் ஏற்படுத்தப்படும். நல்ல சுகாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில், பெருமளவில் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் யோகா அறிமுகப்படுத்தப்படும்.
ஊரக மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகளில், அங்கீகரிக்கப்பட்ட சுகாதார வல்லுநர்கள், ‘சமூகத்திற்கு திரும்ப வழங்குதல்’ திட்டத்தின் கீழ் தொழில்-பயனாளி அடிப்படையில் தன்னார்வ சேவைபுரிவதற்கு இக்கொள்கை ஆதரவு அளிக்கும்.
சுகாதார அமைப்பில் டிஜிட்டல் கருவிகளை பெரும் அளவில் பயன்படுத்தி அதன் திறனை மேம்படுத்தி, வெளிக்கொணர இக்கொள்கை வலியுறுத்துவதுடன், தேசிய டிஜிட்டல் சுகாதார அதிகார அமைப்பை (என்.டீ.எச்.ஏ.) ஏற்படுத்தி, தொடர் கவனிப்பு சேவையை வரைமுறைபடுத்துதல், வளர்த்தல் மற்றும் டிஜிட்டல் சுகாதாரத்தை செயல்படுத்துல் ஆகியவற்றை மேற்கொள்ளும்.
இக்கொள்கை படிப்படியான முன்னேற்றத்தை உறுதி செய்யும் அடிப்படையிலான அணுகுமுறை வலியுறுத்துகிறது.
பின்னணி:
தேசிய சுகாதாரக் கொள்கை, 2017, பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்தல் உள்ளிட்ட விரிவான வழிமுறைகளுக்கு பின்பாக முறைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய அரசு வரைவு தேசிய சுகாதார கொள்கையை உருவாக்கி, 2014, டிசம்பர், 30 அன்று பொது இணையதளங்களில் வெளியிட்டது. அதற்கு பின்பாக, பங்குதாரர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் விரிவான கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டு, பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், வரைவு தேசிய சுகாதார கொள்கை மேலும் மெருகூட்டப்பட்டது. இது, 2016, பிப்ரவரி, 27 அன்று துணை கொள்கை உருவாக்கும் அமைப்பான, சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்விற்கான மத்திய மன்றத்தின் பன்னிரெண்டாவது மாநாட்டில் அங்கீகாரத்தை பெற்றது.
முந்தைய சுகாதாரக் கொள்கை 2002ம் ஆண்டில் முறைப்படுத்தப்பட்டது. அதற்கு பின்பாக ஏற்பட்ட சமூக, பொருளாதார மற்றும் நோய்விபரவியல் மாற்றங்கள், தற்போதைய மற்றும் உருவாகி வரும் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் புதிய தேசிய சுகாதாரக் கொள்கையை உருவாக்குவதற்கான தேவை நேரிட்டது.