2015-16 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி அரசின் தங்கப்பத்திர திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக தங்கத்தை உலோகமாக வைத்திருக்கும் தங்கத்தின் தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு 300 டன் அளவிலான தங்கக்கட்டிகள் மற்றும் நாணயங்கள் வாங்கப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதி தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதியின் மூலம் தீர்க்கப்படுகிறது. இந்த தங்கப்பத்திரங்கள் திட்டத்தின் மூலம் அரசின் நடப்பு கணக்கு நிதி பற்றாக்குறை குறையும்.
2015-16 ஆம் ஆண்டுக்கான தங்கத்தை சந்தையில் பெறும் அரசின் திட்டத்திற்குள் தற்போது வெளியிடப்படவுள்ள தங்கப்பத்திரங்கள் அடங்கும். மத்திய நிதியமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்திய ரிசர்வ் வங்கி தங்கப்பத்திரங்களுக்கான மொத்த தொகையை முடிவு செய்யும். தங்கத்தின் விலை மாறுபாடுகளால் ஏற்படும் நிதிச்சுமை தங்க இருப்பு நிதியம் உருவாக்கப்படுவதன் மூலம் தீர்க்கப்படும். தங்கத்தை வாங்குவதற்கான செலவினங்கள் அரசுக்கு குறையும். இந்த நிதி தங்க இருப்பு நிதியத்துக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
1 ரூபாய் மதிப்பில் அரசின் தங்கப்பத்திரங்களை வாங்கலாம். தங்கத்தின் இருப்பு கிராம் அளவில் குறிக்கப்படும்.
2 இந்திய ரிசர்வ் வங்கி. இந்திய அரசின் சார்பில் பத்திரங்களை வெளியிடும். ஆகவே, அரசின் உத்தரவாதம் இதற்கு உண்டு.
3 இந்தப் பத்திரங்களை அளிப்பதற்கான செலவு மற்றும் விற்பனைக்காகும் தரகு ஆகியவற்றை அரசு ஏற்கும்.
4 இந்தியர்களுக்கு மட்டும்தான் இந்தப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆண்டொன்றுக்கு ஒருநபர் 500 கிராமிற்கு மேலாக இதில் முதலீடு செய்ய முடியாது.
5 இந்தப் பத்திரங்களுக்கு வட்டிவிகிதத்தை அரசு முடிவு செய்யும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தின்படி வட்டிவிகிதத்தில் மாற்றங்கள் ஏற்படும். முதலீடு செய்தபோது எந்தத் தொகைக்கு தங்கப்பத்திரங்கள் வாங்கப்பட்டதோ அதற்கு வட்டி அளிக்கப்படும். வட்டிவிகிதம் நிலையானதாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கும்.
6 பத்திரங்கள் டி-மாட் வடிவிலும், காகித வடிவிலும் கிடைக்கும்.
7 5, 10, 50, 100 கிராம் என்ற அளவில் பத்திரங்கள் வெளியிடப்படும்.
8 பத்திரங்களை வாங்கும் போதும். திரும்ப அளிக்கும் போதும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி தங்கத்திற்கு ஈடான தொகை கணக்கிடப்படும். வட்டிவிகிதம் பத்திரங்களை வாங்கும் போதும், திரும்பப் பெறும்போதும் அதன் மீதான கடனைப் பெறும் போதும் இவ்வாறு கணக்கிடப்படும்.
9 வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், தபால் நிலையங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்களை வழங்கும் அலுவலகங்கள் ஆகியவை தங்கப்பத்திரங்களுக்கான தொகையை பெறுவதற்கும். திரும்பப் அளிப்பதற்கும் அதிகாரம் உள்ளது.
10 இந்தப் பத்திரங்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். தங்கப்பத்திரங்கள் அரசால் வெளியிடப்படுவதால், 2015-16 ஆம் ஆண்டு முதல் நிதி பற்றாக்குறையில் இலக்குகளுக்குள் இருக்கும்.
11 தங்கப்பத்திரங்கள் மீது கடன்களைப் பெறலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின்படி தங்கத்தின் மீது அளிக்கப்படும் கடன் போலவே இதற்கும் கடன் வழங்கப்படும்.
12 தங்கப்பத்திரங்களை எளிதாக விற்பனை செய்யலாம்.
13 தங்கத்தைப் போலவே பத்திரங்களுக்கும் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளும் விதிமுறைகள் உண்டு.
14 தங்கத்தை உலோகமாக வைத்துக்கொண்டால் எவ்வாறு முதலீட்டு லாபத்திற்கான வரி விதிக்கப்படுகிறதோ, இதற்கும் வரி விதிக்கப்படும். நீண்டகால முதலீட்டு லாபத்திற்கு விதிக்கப்பட வேண்டிய வரி குறித்து வருமான வரி சட்டத்தின்படி, வருமான வரித்துறை சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டுவரும்.
15 தங்கப் பத்திரங்களின் மூலம் இந்திய அரசுக்கு கிடைக்கும் தொகை, அதனால் அதற்கு வட்டிவிகிதம் ஆகியவை தங்க இருப்பு நிதியத்திற்கு மாற்றப்படும், அரசு தங்கம் வாங்குவதற்காக செலவிடப்படும் தொகையில் கிடைக்கும் சேமிப்பும் இந்த நிதிக்கு மாற்றப்படும். தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதால், இந்த நிதியம் பாதுகாப்பு அளிக்கும். இந்த நிதியம் அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
16 தங்கப்பத்திரங்கள் முதிர்வு அடையும் போது தொகை ரூபாயில் வழங்கப்படும். இதற்கான வட்டிவிகிதம் தங்கத்தில் முதலீடு செய்த தொகைக்கு வழங்கப்படும். தங்கப் பத்திரங்கள் கிராம் அளவில் வழங்கப்படுவதால். பத்திரங்களை திரும்பப் பெறும் போது அப்போதைய தங்கத்தின் விலையை கணக்கிட்டு தொகை அளிக்கப்படும். அன்றைய நிலையில் தங்கத்தின் விலை குறைந்திருந்தால், அவர்களுடைய தங்கப்பத்திரம் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் நீட்டிக்கலாம்.
17 தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் காணப்படுவதால் முதலீட்டாளர்களை பாதுகாக்க தங்க இருப்பு நிதியம் உதவும். தங்க இருப்பு நிதியம் சரியாக செயல்படவில்லை எனில் அரசால் அது சீரமைக்கப்படும்.
18 இதில் வரும் லாபம் அல்லது இழப்பு ஆகியவற்றை முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே அவர்கள் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் குறித்து விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்.
19 இந்த தங்கப்பத்திரங்கள் எளிதாகக் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. வங்கிகள், தபால் நிலையங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுடன் தேசிய சேமிப்பு பத்திரங்களை வழங்குபவர்களிடம் கிடைக்கும்.