டோஹா நகர்புறத்தில் அமைந்துள்ள மேஷிரெப் கட்டுமான தளத்தில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்து உரையாடினார்.
அங்கு கூடியிருந்த தொழிலார்களிடம் பேசிய பிரதமர், டோஹா வந்தவுடன் நேரடியாக அவர்களை சந்திக்க வந்ததாக தெரிவித்தார். இந்த தொழிலாளர்கள் அங்கு சந்திக்கும் இன்னல்கள் என்னவென்று தமக்கு தெரியும் என்று கூறிய பிரதமர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கத்தார் அரசாங்கத்துடன் இது பற்றி பேசிவருவதாக கூறினார்.
அத்தளத்தில் அமைந்துள்ள மருத்துவ முகாமை பார்வையிட்ட பிரதமர், அங்கு பணிபுரியும் மருத்துவர்களின் சேவையை பாராட்டினார்.
அங்கு பேசி முடித்த பின், ஒவ்வொரு மேஜையாக சென்று தொழிலார்களுடன் உரையாடினார். பின் ஒரு மேஜையில் உள்ள தொழிலாளருடன் அமர்ந்து உணவருந்தினார்.
Smiles and snacks in Doha...my first programme in Qatar was a visit to a Workers' Camp in downtown Doha. pic.twitter.com/vgQwZdZssX
— Narendra Modi (@narendramodi) June 4, 2016